தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்கிறவர்களுக்கும், தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும், வரலாறு, சமயம், தத்துவம் பற்றிய ஆர்வலர்களும், அறம் பற்றி ஆழ்ந்து கவலைப்படுவோரும் படித்து பயன்படும் வகையில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நூலில் அறம், அறமரபுகள், அறங்களின் தோற்றம், தொல்காப்பிய அறம், பிராமணிய தருமம்,சமண-பௌத்த அறம், இவற்றின் உருவாக்கம், இவை தமிழகத்தில் பரவிய வரலாறு, சங்ககாலத் தமிழ்ச் சமூகவரலாறு, பக்தி காலத்தில் நிகழ்ந்த அறிய மாற்றங்கள் மற்றும் சோழர் பண்பாடு பற்றிய தகவல்கள் விளக்கங்கள் மற்றும் செயல்படத்தக்க கருதுகோள்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.