தமிழ் வீரநிலைக் கவிதை-க.கைலாசபதி

350

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

குறுநில மன்னர்கள்:

அரசர்களைக் குறித்து எப்படியோ, அப்படியே குறுநிலத் தலைவர் களைக் குறித்தும் இனங்காணல், எண்ணிக்கையிடுதல் ஆகியன சிக்க லாகவே உள்ளன. பாடல்களில் அரசர்கள் நோக்கப் பெற்ற நிலையும், தொகைநூல்களில் அப்பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையும், குறுநிலத் தலைவர்களுக்கும் பொருந்துவனவாக உள்ளன. தொகையில் குறுநிலத் தலைவர் நாற்பத்தெண்மர் பாடப்பட்டிருப்பினும் நான்கு பாடல்களுக்கு மேலாகப் பாடப்பெற்றோர் எண்மரே ஆவர். குறுநிலத்தலைவர் ஒன்பதின்மர் 141 பாடல்களில் எண்பத்தெட்டு பாடல்களுக்கு உரிய வராக உள்ளனர். இது குறுநிலத் தலைவர்களைப் போற்றும் மொத்தப் பாடல்களில் மூன்றில் இரண்டு பங்காகும். புகழ்மிக்க குறுநிலத் தலைவர் ஒன்பதின்மர் வருமாறு:

குறுநில மன்னர்                                                பாடல்களின் எண்ணிக்கை

1. அதியமான் நெடுமான் அஞ்சி                                   23

2.வேள் பாரி                                                                              17

3. ஆய் அண்டிரன்                                                                  14

4. பேகன்                                                                                     7

5. குமணன்                                                                                 7

6.காரி                                                                                           6

7. நாஞ்சில் வள்ளுவன்                                                         5

8. பிட்டன் கொற்றன்                                                             5

9. எழினி                                                                                       4

 

இப்பட்டியலைக் குறித்துக் கூறத்தக்க ஒரு செய்தியாவது. தமிழ் நாட்டின் பெருங்கொடையாளிகள் வள்ளல்கள் என மரபுவழி போற்றப்பட்ட எழுவரில் ஐவரை இப்பட்டியல் உள்ளடக்கியது என்பதாகும்

Weight0.500 kg