தமிழக ஆடல் வரலாறு – கார்த்திகா கணேசர்

175

தமிழக ஆடல் வரலாறு எனும் இந்நூல் பின்வரும் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது: இந்திய ஆடற்கலை வரலாறு. தமிழகத்தின் ஆடற்கலை வரலாறு, சிலப்பதிகாரம், அறநெறிக் காலம், பக்தி இயக்க காலம் வரையிலான ஆடற்கலைகள் பற்றி கூறுகிறது.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மனித நாகரிகத்துடன் பின்னிப் பிணைந்து வளர்ந்ததே அவனது ஆடலும் பாடலும். இந்த வகையில், வேறுபட்ட சமுதாயங்கள் தமது கலைகளை வளர்த்து வந்துள்ளன. எமது சமுதாயத்தைப் பின்னோக்கிப் பார்ப்போமானால் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட செப்பினால் ஆன ஆடல் நங்கையின் உருவம் ஐயாயிரம் வருடப் பழமை வாய்ந்தது. இது அன்று வளர்ச்சியுற்ற ஆடல் இருந்ததற்கு ஆதாரமாக உள்ளது.

தமிழர்களிடையே சங்ககாலத்தில் பலவகையான ஆடல்கள் வழக்கில் இருந்துள்ளன. கிரியைகளில் ஆடல்கள், போரில் வென்ற களிப்பில் ஆடல்கள், சமூகம் ஒன்றுகூடி ஆடும் ஆடல்கள் எனப் பலவற்றைக் காண்கிறோம். இந்நிலையில் ‘தமிழக ஆடல் வரலாறு எனும் இந்நூல் பின்வரும் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது: இந்திய ஆடற்கலை வரலாறு. தமிழகத்தின் ஆடற்கலை வரலாறு, சிலப்பதிகாரம், அறநெறிக் காலம், பக்தி இயக்க காலம். நடராஜர் தாண்டவமும் தத்துவார்த்தப் பின்னணியும், நடராஜமூர்த்தி, நாட்டிய சாஸ்திரம், வடமொழி நாட்டிய சாஸ்திரத்தின் மூலம் தமிழ் அகத்தியரது நாட்டிய நூலே, தமிழில் இருந்த நாட்டிய இலக்கண நூல்கள் எவ்வாறு அழிந்தன?, பஞ்ச மரபு எனும் நாடகத் தமிழ் நூல்.

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்: இவர் ஏறக்குறைய ஐந்து தசாப்த கால நாட்டிய அனுபவம் வாய்ந்தவர். நாட்டியக் கலையை சாஸ்திர முறைப்படிப் பயின்ற இவருக்கு, முதன் முதலில் குருவாக அமைந்தவர் யாழ்ப்பாணம் இணுவில் வீரமணி ஐயர் ஆவார். அதன் பின்னர் இவர் நாட்டியக் கலையில் முதுபெரும் விருட்சமாக விளங்கிய வழுவூர் இராமையாபிள்ளை அவர்களிடம் குருகுல முறையில் பரதம் பயின்றவர். இவர் இந்தியாவின் உயர்தர நாட்டிய தாரகைகள் இருபத்தொரு பேரில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர். [Biographical Dictitionary of Musicians and Dancers of India (Volum 5) by well known Music & Dance Critic N.Rajagopalan]

‘காலந்தோறும் நாட்டியக் கலை’ என்னும் இவரின் நூல் தமிழ்நாடு அரசின் விருதை 1982ஆம் ஆண்டு வென்றது. ‘இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு’ எனும் இந் நூலுக்குத் தஞ்சை பல்கலைக்கழகத்தால் 1985ஆம் ஆண்டு பரிசு வழங்கப்பட்டது. இவை தவிர, ‘தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்’, ‘நாட்டியக் கடலின் புதிய அலைகள்’ என்பனவும் இவர் எழுதிய நூல்கள் ஆகும். இலங்கையின் இந்து கலாசார அமைச்சு ‘நாட்டிய கலாநிதி’ எனும் விருதை 1982ஆம் ஆண்டு இவருக்கு அளித்து கௌரவித்தது.

கொழும்புப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்தின் பிளக்பூல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகை விரிவுரையாளராகப் பணிபுரிந்த இவர், பல நடன நிகழ்ச்சிகளை மேடையேற்றியதுடன் 21 நாட்டிய நாடகங்களையும் மேடையேற்றிய அனுபவம் உடையவர். தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். அங்குள்ள மாணவர்களுக்கு நடனம் கற்பித்து வருவதுடன் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (AT.B.C) வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.

குமரன் புத்தக இல்லம்

ISBN 978-624-6164-54-6

#1018

¥175

Weight0.250 kg