தமிழிசை-பேரா.முனைவர்.செ. சுப்புலட்சுமி

225

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பொதுவாக இசையை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று விதிமுறைகளுக்கு உட்பட்ட இசைக்கலைஞர்களின் இசை, மற்றொன்று இயல்பாகப் பாடும் எளிமையான மக்களின்இசை. இசைக் கலைஞர்களின் இசை கட்டுப்பாடு உடையது. பின்னது மன இயல்புக்குத் தக்கவாறு அமைவது. முன்னது முறையுடன் பாடுவது பின்னது நிறைவுடன் பாடுவது. நன்கு அறிந்து பாடுவது கலைஞர்களின் இசை. நினைத்ததைப் பாடுவது நாட்டுப்புற இசை. நாட்டுப்புறப் பாடல்களிலும் ஒரு வகையான இசை அமைப்பு உள்ளது நாட்டுப்புறப் பாடல்களில் தோடி, புன்னாகவராளி, செஞ்சுருட்டி, ஆனந்தபைரவி, மாயாமாளவ கௌளை, கௌளிபந்து, சாமா, இச்சிச்சி போன்ற இராகங்கள் காணப்படுகின்றன. (மீ.ப.சோமு, நமது செல்வம் வானதி பதிப்பகம் சென்னை 1980-பக்-58) தாலாட்டுப்பாடல்கள் நீலாம்பரியிலும், காவடிச்சிந்து ஆனந்தபைரவியிலும், கரகாட்டப் பாடல்கள் நாதநாமக் கிரியாவிலும், காம்போஜி, கல்யாணி, ஆகிய இராகங்களிலும், ஊசல் நவ்ரோஜ் இராகத்திலும் காணப்படுகின்றன. சிந்துப்பாடல்கள் தன்யாசி, மாயாமாளவ, கெளளை இராகத்திலும், நலுங்குப்பாடல்கள் நவ்ரோஜ் இராகத்திலும் காணப்படுகின்றன. மேலும் கிளிக்கண்ணி, நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு போன்றவைகளும் பாடப்பட்டு வருகின்றன.

இன்றைய நிலையில் நாட்டுப்புற இசையை உலகுக்கு உணர்த்தும் பெரும் பணியை வானொலியும், தொலைக்காட்சியும், ஆலயங்களும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றமும் செய்து வருகின்றன. நாட்டுப்புறப்பாடல்கள் வழியாக நமக்குப் பல புதிய மெட்டமைப்புகள் கிடைக்கின்றன.

நாட்டுப்புறப்பாடல் வகைகள்

1) தாலாட்டுப்பாடல்

2)வினாவிடைப்பாடல்

3) ஏற்றப்பாடல்

4) விழாப்பாடல்

5) கரகப்பாடல்

6) கோலாட்டப்பாடல்

7) அம்மானைப்பாடல்

8) தெம்மாங்குப்பாடல்

9) ஒப்பாரிப்பாடல்

10) ஆரத்திப்பாடல்

11) ஊஞ்சல்பாடல்

12) கும்மிப்பாடல்

13) வில்லுப்பாட்டு

Weight0.300 kg