தமிழ்க் கதைப்பாடல்களின் தோற்றம், நாட்டார் பாடல்களுடனான வேறுபாடு, பதிப்பு வரலாற்றை உள்ளடக்கி, தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, சமூக, இதிகாச, புராண வழக்காற்றுப் பாடல்களை விரிவாக ஆய்ந்துள்ள நுால்.
அம்மானை, வில்லிசை, தெக்கன் பாடல்கள் எவ்வகையில் கதைப்பாடல்களிலிருந்து வேறுபட்டுத் தனித்து இயங்குகின்றன என்பதும், பாடுபொருள் மாற்றத்தால் அம்மானைப் பாடல்கள் தனித்தன்மை இழந்து நாட்டார் கலையுடன் இணைவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கதைப்பாடல் ஆசிரியர் வரலாறு, பதிப்பு வரலாற்றுடன் அமைப்பும், வகைமையும் விரிவாக தரப்பட்டுள்ளது. செவ்வியல் இலக்கியத்துக்கும், நாட்டார் மரபுக்குமான வேறுபாடு ராமாயணக் கதை உதாரணத்தோடு தரப்பட்டுள்ளது.
வரலாறு தழுவியது, புராண இதிகாசக் கதைகளை தழுவிய செவ்வியல் கதைகள், செவ்வியல் இலக்கியங்களிலிருந்து கட்டமைக்கப்பட்டவை, இதிகாச, தெய்வப்புனைவு மற்றும் சமூகக் கதைப்பாடல்கள் என வகைமையுடன் விளக்கும் அரிய நுால்.