தோல்பாவைக் கூத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிகழும் நாட்டார் நிகழ்த்துக் கலைகளுள் ஒன்று. தோலில் வரையப்பட்ட வண்ணப் படங்களை விளக்கின் ஒளி ஊடுருவிச் செல்லும் திரைச்சீலையில் பொருத்தி, கதையின் போக்கிற்கு ஏற்ப உரையாடி, பாடி, ஆடிக் காட்டும் கலை. தோல்பாவைக் கூத்து – ‘தோலால் ஆன பாவையைக் கொண்டு நடத்தும் கூத்து’. கணிகர் இனக்குழுவின் மண்டிகர் சாதியினர் நிகழ்த்தும் கலை இது.