தமிழ்க் கல்வெட்டுகள் புலப்படுகின்ற வணிகக் குழுக்கள் மற்றும் படைப்பிரிவுகள் – வரலாறு (கி.மு.300 – கி.பி.1600)

800

தமிழ்க் கல்வெட்டுகள் புலப்படுகின்ற வணிகக் குழுக்கள் மற்றும் படைப்பிரிவுகள் – வரலாறு (கி.மு.300 – கி.பி.1600)

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கல்வெட்டு துணை கண்காணிப்பாளர், இந்திய அரசுத் தொல்லியல் துறை
அவர்கள் எழுதிய தமிழ்க் கல்வெட்டுகள் புலப்படுகின்ற வணிகக் குழுக்கள் மற்றும் படைப்பிரிவுகள் – வரலாறு (கி.மு.300 – கி.பி.1600)

புத்தக வாழ்த்துரையில் “முனைவர் திரு.க.பன்னீர்செல்வம் எழுதி வெளியிடுகிற இந்நூல் இடைக்காலத் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சமூகத்தின் ஒரு முக்கிய பகுதியினராக இருந்த வணிகர்குழுக்கள், வணிகவீரர் முதலியோரின் நடவடிக்கைகளையும் அவர்களுக்கும், அரசுக்கும் இருந்த தொடர்பு முதலியவற்றைப்பற்றியும் இந்நூல் ஆராய்கிறது.
பலவகைகளில் ஆசிரியர் இந்திய அரசு தொல்லியல் ஆய்வுத்துறையின் கல்வெட்டியல் பிரிவில் நீண்டகாலம் பணிபுரிந்து வருவதால், இந்நூலுக்கு வேண்டிய கல்வெட்டுத்தரவுகளை முழுமையாக அக்கரையோடு தொகுத்துள்ளார். அத்துடன் தொடர்புடைய எல்லா இலக்கிய செய்திகளையும் எடுத்துப் பயன்படுத்தியுள்ளார்.மேலும் இத்தலைப்பை பற்றிப் பிற ஆசிரியர் எழுதியுள்ள கருத்துக்களையும் படித்து உரிய வகைகளில் கையாண்டுள்ளார்.” – ஆய்வாளர். சுப்புராயலு கூறியுள்ளார்.
“இந்நூலில் வணிகர்களின் சாதிகள், தொழில்கள், வணிகர்களின் குழுக்கள், நற்பணிகள், படைப்பிரிவுகள், சந்தைகள் என்ற உட்தலைப்புகளில் விரிவாக விவரித்துள்ளார். குறிப்பாக வணிகர்கள் குடவோலைமுறையில் தேர்வு செய்துள்ளதையும், நகரத்தில் பணிசெய்யாமல் இருந்தால், தண்டிக்கின்றமுறையும் சோழர்காலத்தில் இருந்துள்ளதை வெளிக்கொண்டுள்ளது பாராட்டாத்தக்கதாகும். இதுபோல வணிகர்கள் நீர்நிலைகளை உருாக்கியுள்ளதையும். பராமரித்துள்ளதையும், நேர்மையாக வணிகம் செய்துள்ளதையும் உதாரணங்களுடன் சிறந்தமுறையில் தெரிவித்துள்ளார். இதுபோன்ற முக்கியச்செய்திகளை கல்வெட்டுச் சான்றுகளைக்கொண்டு உறுதிப்படுத்தியுள்ளார். “ என வாழ்த்துரையில் திரு. க. பாஸ்கரன், கூறியுள்ளார்.
“தமிழ்நாட்டு வணிகவரலாறு சங்ககாலம் முதலே தொடங்குகிறது. இதற்கு முதன்மையானச் சான்றாகப் பட்டினப்பாலையை குறிப்பிடலாம். தமிழ்வணிகர்கள் உள்ளூர் வணிகத்திலும், கடல் வணிகத்திலும் சிறப்பாக விளங்கியுள்ளனர். இதற்கு கனிசமான தொல்லியல் சான்றுகள் உள்ளன. தமிழ் எழுத்துப்பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள் தென்கிழக்கு ஆசியா, அலக்சாண்டிரியா போன்ற வெளிநாட்களில் கிடைத்துள்ளன. பல்லவர்காலத்தில் தக்கோபா என்ற இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு, ஐநூற்றுவர், மணிகிராமத்தார், சேனாமுகம் என்ற வணிகக்குழுக்களின் செயல்பாடுகளைப்பற்றி கூறுவதாகும்.
தொடர்ந்து சோழர்காலத்தில் சீனாவுடண் வணிகத்தில் நெருக்காமான உறவு இருந்துள்ளது. இதற்கு தடைவந்தபொழுது, முதலாம் இராசேந்திரசோழர். சிரிவிசயமன்னரை எதிர்த்துப் போரிட்டு அதை சரி செய்துள்ளார். உள்நாட்டு வணிகத்தில் அய்யப்பொழில்அய்நூற்றுவர், திசையாயிறத்தி அய்நூற்றுவர், நானாதேசி, மணிக்கிராமத்தார், அஞ்சுவண்ணம், வளஞ்சியர் முதலியவர்கள் பரந்து விரிந்து செயல்பட்டுள்ளனர். இதற்கு ஏறாலமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
புதுகோட்டைமாவட்டத்தில் உள்ள முனிசந்தை என்ற ஊரில் கிடைத்துள்ள கி.பி.927-ஆம் நூற்றாண்டைச் சார்ந்துள்ளக் கல்வெட்டு, ஐநூற்றுவர்பற்றிய செய்தியை தெரிவிக்கிறது அஞ்சுவண்ணம் என்பவர், ஐந்துநேரமும் தொழுகை செய்யும் கலிபாவின் மக்கள் ஆவார்கள். இவர்கள் முஸ்லீம் வணிகர்கள் என்பதை சாதாசிவப்பண்டாரத்தார் அடையாளப்படுத்தியுள்ளார். தமிழ்வணிகம, வணிகக்குழுக்கள், நகரமயம் பற்றியெல்லாம் மீராஅப்பரகாம், சம்பலட்சுமி, நொபுருகரோசிமா, சுப்பராயலு போன்ற அறிஞர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர். அன்மைக்காலங்களில் கிழவனேறி, இளமனூர். சிறுமலை முதலிய ஊர்களில் தற்பொழுது வணிககல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.” – என திரு. சொ. சாந்தலிங்கம் அவர்கள் மதிப்புரையில் கூறியுள்ளார்.
நூலினை பற்றி, அதன் ஆசிரியர் முனைவர், க. பன்னீர் செல்வம், “தொல்தமிழ்நாட்டில் சங்ககாலம் முதற்கொண்டு நாயக்கர்காலம் வரையிலும் வணிகம் நடைப்பெற்றுள்ளதை சான்றுகள் தெரிவிக்கின்றன.’
வணிகம், என்ற சொல்லிற்கு வியாபாரம் செய்தல் என்று பொருள் கொள்ளமுடிகிறது. இதற்கு பண்டமாற்றுமுறைசெய்தல், பரிவர்த்தனை செய்தல், தொழில்செய்தல், வர்த்தகம்செய்தல், வாணிகம்செய்தல், வாணிபம்செய்தல். விற்பனைசெய்தல் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஒருநாட்டில் வணிகம் சிறப்பாக நடைபெறுவதற்கு சரக்குகள் அல்லது பண்டங்கள் அல்லது உற்பத்தி பொருள்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் இருப்புவைத்திருக்க வேண்டும்.’ இவற்றை சந்தையில் விற்பவர்களும். வாங்குபவர்களும் இருக்கவேண்டும். பண்டங்களை விற்பனை செய்துள்ளவர்களை வணிகர்கள் என்றும், வணிகர்களிடமிருந்து தமக்கு தேவையானப் பொருட்களை வாங்கிகொள்ளவோர்களை நுகர்வோர் அல்லது முகவர் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். இச்செயல் நடைபெறுவதற்கு பல நிலைகளிலும் தொடர்புடைய நிலப்பகுதிகள் அல்லது சந்தைகள் அல்லது விற்பனைக் கூடாரங்கள் அமைந்திருக்கவேண்டும்.
இவை ஒரு இடமாகவும் (வியாபாரம் நடக்கின்றபகுதி) சந்தையாகவும், (குறித்தக்காலங்களில் நடைபெறும் வியாபாரக்கடைகளாகும்) சந்தைவெளியாகவும் (தொடர்ச்சியாக வியாபாரம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வெளியிடப் பகுதியாகும்) முனிசந்தையாகவும் (முனைப்புடன் செயல்பட்டு வணிகம் நடந்துள்ள இடமாகும்) சுக்கிரவார சந்தையாகவும் (வெள்ளிக்கிழைமையில் நடைபெற்றுள்ள உள்ளூர் சந்தையாகும்) நகரமாகவும் (வியாபாரிகள் வாழ்ந்துள்ளத் தெருக்களில் செய்துள்ள இடமாகும் ) குதிரைப்பேட்டையாகவும் “ (குதிரைகளை வியாபாரம் செய்துள்ள சந்தையாகும்) அமைந்திருக்கும். இவற்றைப்போல, அடிகீழ்தளமாகவும், (வணிகர்கள் வியாபாரம் செய்வதற்கு செல்லுகின்ற வழிகளில், பாதுகாப்புடன் தமது பண்டங்களை தரைகீழ்தளங்களில் வைத்துள்ள இடமாகும்) பந்தர் அல்லது பண்டகச்சாலையாகவும் (வணிகர்கள் தங்களது பண்டங்களைப் பாதுகாப்புடன் சேமித்துவைத்துள்ள இடமாகும்) அமைந்திருக்கும். வணிக்கிராமமாகவும்(உள்ளூர்களில் வணிகம் செய்துள்ள இடமாகும்) மணிக்கிரமமாகவும்,’ (மணிவிற்பவர்களின் வணிக சந்தையாகும்.) இருந்திருக்கும்.
இவற்றுடன் சாத்துகளின் சந்தையாகவும் 3 (வணிகக்குழுக்கள் ஒன்றாக சேர்ந்து வியாபாரம் செய்துள்ள இடமாகும்) நிகமங்களின் சந்தையாகவும் (வணிகக்குழுக்கள் கூடி வியாபாரம் செய்துள்ள இடங்களாகவும்) அமைந்திருக்கும்.
வணிகம் நடைபெறுவதற்கு முக்கிய காரணியாக இருப்பது உழைப்பாளர்களின் உழைப்பினால் உருவாகின்ற உற்பத்தி பொருட்களாகும். இவற்றை உருவக்குவதற்கு முதலீட்டாளார்களின் மூலதனமும் முக்கியப்பொருளாதார பெருக்கத்திற்கு காரணியாக அமைந்திருக்கும். உழைப்பாளர்களின் உழைப்பாலும், உற்பத்தியாளர்களின் மூலதனத்தாலும் உருவாகின்ற உற்பத்திப்பண்டங்களை, ஒருவர் வாங்கி, பலருக்கு விற்கின்ற முறைக்கு வணிகம் என்று பெயராகும்.
உற்பத்திபொருட்களை, ஒருவர் உற்பத்தியாளர்களிடமிருந்து மொத்தமாக வாங்கி, மற்றவர்களுக்கு விற்கின்ற முறைக்கு மொத்தவியாபாரம் என்று பெயராகும். பண்டங்களை மொத்தமாக விற்பனை செய்துள்ளவர்களுக்கு மொத்த வியாபாரிகள் என்று பெயராகும். உற்பத்திபொருட்களை மொத்தவியாபாரிகளிடமிருந்தோ அல்லது மூலத்தனத்தார்களிடமிருந்தோ ஒருவர் சில்லறையாக பொருட்களை வாங்கி. பலருக்கு அல்லது பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளமுறைக்கு சில்லரை வியாபாரம் என்று பெயராகும். பண்டங்களை சில்லரையாக விற்பவர்களுக்கு சில்லரை வியாபாரிகள் என்று பெயராகும். வணிகம் என்ற வியாபாரபெயரசொல்லிற்கு, வியாபித்தல், பெருக்குதல், இலாபத்தை அதிகரிக்கசெய்தல், பொருள் விருத்திசெய்தல், தனலாபத்தை பெருக்குதல், வணிகபதம், வணிச்சயம், வர்த்தகம், வாணிகம், வியாபரிக்கசெய்தல், வியாபாரம்செய்தல் விற்பனைசெய்தல் என்ற பெயர்ச்சொற்களும் நடைமுறையில் இருந்துள்ளன. வணிகம் பற்றியசெய்திகள் சங்ககாலத்தின் இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற எட்டுத்தொகை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சாதிப்பிரிவுகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் வணிகர்கள் யார், இவர்கள் எந்தெந்த சமூகப்பிரிவைச் சார்ந்தவர்கள், இவர்கள் செய்துள்ள வணிகம் என்னென்ன, எவையவை, எப்படிப்பட்ட வணிகங்களைச் செய்துள்ளார்கள் என்பனவற்றைபற்றி உரிய இயல்களில் முறையே விவாதிக்கப்படுகிறது.
வணிகர்கள் என்பவர்கள், வியாபாரம் செய்துள்ள விற்பனையாளர்கள் ஆவார்கள். இவர்கள், பொதுவாக வைஷ்யர் அல்லது வைஷ்யக்கோத்திரம் அல்லது வைஷ்யவருணம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளனர். இதுபோல வைஷ்யர்கள், வணிகசூரியர் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுள்ளனர்.  இவற்றைத்தவிர வணிகு, வாணியன், வாணிகன், மணிக்காலறிஞர், மணிகாரன், பறிமாறுவான், வியாபாரி முதலியபெயர்ச்சொற்களிலும் வணிகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அறுவை வணிகர், கைகோளர், சாலியர், வெள்ளான்செட்டிகள், எண்ணெய் வாணியர், கொழு வணிகர், கவறைசெட்டிகள், குதிரைச் செட்டிகள், தளம் செட்டிகள், பறம்பன், ஆதிவணிகன்,தன்ம செட்டிகள், காமுண்ட சுவாமிகள், கழுதை சாத்து வணிகர், அஞ்சுவண்ணத்தார், வளஞ்சியர், போன்ற இன்னும் பல வணிகர்களைப் பற்றி இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆய்வாளர்கள், மாணவர்கள் இந்நூலினை வங்கிச் சென்றனர். இந்நூல், மரபாளர்.in தளத்தில் விற்பனைக்கு உள்ளது.

Price: 700

Pages: 328

 

 

Weight 0.7 kg