பொருளடக்கம்
1. அறிமுகம்
2. மனித இயக்கமும் சுற்றுச் சூழலும்
3. வீடு, வெளி, காலம்
4. வீட்டமைவும் மரபும்
5.தொல் பழங்காலக் கட்டடக்கலை
6. சங்க காலக் குரம்பைகளும் கூரை வீடுகளும்
7. சங்க கால மனைகளும் வடிவமைப்பும்
8. தமிழக மலையக மக்களும் வீடுகளும்
9. தமிழக சமவெளி மக்களும் வீடுகளும்
10.வீடுகளும் கட்டுமான வடிவங்களும்
11. வீடு: பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்
டாக்டர் இராசு பவுன்துரை தமிழர் கலை, கட்டடக்கலை, பண்பாடு ஆய்வில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றார். இதுவரை பதினைந்து நூல்களுக்கு மேல் இத்துறையில் எழுதியுள்ளார். இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் 150-க்கும் மேலாகும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைத் துறையில் இணைப்பேராசிரியராகப் பணிசெய்து வருகின்றார். இலங்கை, சிங்கப்பூர், பாலித்தீவு, இந்தோனேசியா, தாய்லாந்து, ஹாங்காங், போர்ச்சுக்கல், மெக்காவ், சீனம், தென்கொரியா, இங்கிலாந்து, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று ஆய்வுகளையும் நிகழ்த்தியுள்ளார். தென்கொரியப் பண்பாட்டு ஆய்வாளர் கழகம், கட்டடக்கலை வரலாற்று ஆய்வாளர் கழகம் ஆகியவற்றின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வு நிறுவனங்களின் தகைமைகளைப் பெற்றவர். இவர் எழுதிய “தமிழகப் பாறை ஓவியங்கள்’ என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைக்கப்பெற்றது.