தமிழக முத்திரை மோதிரங்கள், ஆறுமுக சீதாராமன், சங்கரன் ராமன்

600

ஆணைகள் எழுதப்பட்ட பின்னர் இடப்படும் இலச் சினை (முத்திரை) மதிப்பு வாய்ந்த ஒன்று. முத்திரையின் மூலமே அவ்வாணை நிறைவேற்றப்படுகிறது. தர்ம சாஸ்திரங் கள்கூட இதனை மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றன. ‘முத்ரா ராக்ஷஸம்’ என்ற நாடக நூலில் நந்தர்களின் அமைச்சனான ராக்ஷஸன் ஓரிடத்தில் ஆணையொன்றினை மறுக்க இயலாது தவிக்கிறான். காரணம் அதில் அவனுடைய முத்திரையே காணப்படுகிறது. அந்த நாடகத்தில் அவனுக்கே தெரியாமல் இடப்பட்ட முத்திரை அது. ஆனாலும், அம்முத்திரை இருப்ப தால் அவனால் மறுக்க இயலவில்லை.

Add to Wishlist
Add to Wishlist
Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

தமிழக முத்திரை மோதிரங்கள்

ஆசிரியர்கள்: ஆறுமுக சீதாராமன், சங்கரன் ராமன்

பண்டைக்கால முத்திரைகளைப் பற்றிய ஆய்வு நமது நாட்டின் வரலாற்றை அறியவுதவும். மேலும் அக்கால அரசியல், சமூக, பொருளாதார நிலைகளை நிலைகளை உணர்த்துவதோடு பழந்தமிழரின் தொழில்நுட்பத் திறனையும், நாகரிகச் சிறப்பையும் வெளிப்படுத்தும்.

தமிழகத்தில் கிடைத்த முத்திரைகளிலிருந்து பாமர மக்களும், எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. தமிழ்மொழி செம்மொழியென அங்கீகாரம் பெறுவதற்கு எழுத்துப்பொறிப்புள்ள சங்ககாலக் கல்வெட்டுகள், பானை ஓடுகள், காசுகள், மோதிரங்கள் சிறந்த வரலாற்றுச் சான்றுகளாக திகழ்கின்றன. அதேபோல் முத்திரைகளும் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.

தமிழகத்தில் கிடைத்த அரிய எழுத்துப் பொறிப்புள்ள, இலச்சினைப் பொறிப்புள்ள முத்திரைகளைக் கொண்டு சங்ககால வரலாற்றை எழுத, வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், நாணயவியல் ஆய்வாளர் ஆகியோர்க்குப் பயன்படும் வகையில் எளிய நடையில் அமைந்த இந்தச் சிறிய நூல் வெளியிடப்படுகிறது.

இந்நூலில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான முத்திரைகள் எனது களப்பணியில் கண்டறிந்தவை. சில சில முத்திரைகளின் ஒ படங்களை எனக்கு கொடுத்து உதவிய சங்கரன்ராமன் மற்றும் மு.விஜயகுமார் ஆகியோர்க்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பல வகை யான முத்திரைகள் கிடைத்துள்ளன. தனிப்பட்டோரின் முத்திரைகள், குறிப்பிட்ட வணிகக் குழுவினரின் முத்திரைகள், அரசாங்க உயர் அதிகாரிகளின் முத்திரைகள், பெரியோர்களது முத்திரைகள், படைத்தளபதிகளுக்கான முத்திரைகள், அமைச் சர்களுக்கான முத்திரைகள், சமயம் தொடர்பான முத்திரைகள் என்று பல்வேறு வகைகளில் முத்திரைகள் இருந்துள்ளன. அம்முத்திரைகளிலே வாசகங்கள் பொறிக்கப்படுவதும் உண்டு.

உண்மையை நிரூபிக்கவும் அடையாளம் காணவும் அரசன் முத்திரையை உபயோகிக்கும் வழக்கம் மிகப் பழங் காலத்தில் இருந்தே காணப்படுகிறது. அதனால் அரசாங்கத் திற்கு முத்திரை ஒரு முக்கிய சாதனமாக விளங்கியது எனலாம்.

ஆணைகள் எழுதப்பட்ட பின்னர் இடப்படும் இலச் சினை (முத்திரை) மதிப்பு வாய்ந்த ஒன்று. முத்திரையின் மூலமே அவ்வாணை நிறைவேற்றப்படுகிறது. தர்ம சாஸ்திரங் கள்கூட இதனை மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றன. ‘முத்ரா ராக்ஷஸம்’ என்ற நாடக நூலில் நந்தர்களின் அமைச்சனான ராக்ஷஸன் ஓரிடத்தில் ஆணையொன்றினை மறுக்க இயலாது தவிக்கிறான். காரணம் அதில் அவனுடைய முத்திரையே காணப்படுகிறது. அந்த நாடகத்தில் அவனுக்கே தெரியாமல் இடப்பட்ட முத்திரை அது. ஆனாலும், அம்முத்திரை இருப்ப தால் அவனால் மறுக்க இயலவில்லை.

இந்தியாவில் கிடைத்துள்ளவற்றுள் மிகவும் பழமை யான முத்திரை மொஹஞ்சதாரோவில் கிடைத்ததே ஆகும். அதில் உள்ள வாசகம் இன்னும் படிக்க இயலாத நிலையிலேயே உள்ளது.

ஏதாவது சின்னங்கள் முத்திரைகளில் இடம்பெறும். அவை ஏதாவதொரு விலங்கினத்தின் உருவமாகமோ அல்லது சிறப்பான பொருளின் உருவமாகவோ அமையலாம். அத னுடன் வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கும். பிற்காலம் வரை யிலும்கூட இம்முறையே பின்பற்றப்பட்டது.

சில முத்திரைகள் பண்டைக்காலத்தில் கோயில்களில் முத்திரையாகப் பயன்படுத்தியிருக்கலாம். சில முத்திரைகள் கொடுக்கல், வாங்கல் அதிகாரியின் முத்திரையாக இருக்கலாம். ஏற்றுமதி, இறக்குமதி பொருள்களுக்குச் சுங்கம் வாங்கியதற்கு அடையாளமாக அப்பொருள்களின் மேலே அரசனுடைய அலுவலர்கள் முத்திரையைப் பொறித்தார்கள். கோயிலுக்குரிய பற்று, வரவுகள் தொடர்பாகவும் பாதுகாப்பு கருதியும் அதன் நிர்வாகத்தினர் இம்முத்திரைகளைப் பயன்படுத்தி இருத்தல் வேண்டும்.

பொதுவாக இம்முத்திரைகள் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் செய் யப்படுவது உண்டு. பண்டைக்காலத்தில் களிமண்ணால் (சுடு மண்) செய்யப்பட்ட முத்திரைகளும் பயன்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் சங்க காலத்தில் வெளியிட்ட தங்கத்தால் செய்யப் பட்ட முத்திரைகள் இன்றுவரை கிடைக்கவில்லை. எதிர்காலத் தில் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கிடைத்துள்ள முத்திரைகளை மட்டுமே ஆய்வு செய்து இந்த நூலில் தரப்பட்டுள்ளன. வெளிமாநிலங் களிலும் வெளிநாட்டிலும் கிடைத்த முத்திரைகள் எதுவும் இந் நூலில் தரப்படவில்லை.

பொருளடக்கம்

இயல் – ஒன்று

முத்திரைகள்

1. எழுத்துப் பொறிப்புள்ள சங்ககால முத்திரைகள்
2. சோழர் முத்திரைகள்
3. பாண்டியர் முத்திரைகள்
4. சேரர் முத்திரைகள்
5.ஸ்ரீவத்ஸம் முத்திரைகள்
6. சங்கு முத்திரைகள்
7. சக்கர முத்திரைகள்
8. சங்கு சக்கர முத்திரை
9. யானை முத்திரைகள்
10. சிங்க முத்திரைகள்
11. குதிரை முத்திரைகள்
12. நந்தி முத்திரைகள்
13. சுடுமண் முத்திரைகள்
14. ஐந்து சின்ன முத்திரைகள்
15. பறவை முத்திரைகள்
16. அம்மன் முத்திரைகள்
17. கணபதி முத்திரைகள்
18. நண்டு முத்திரைகள்
19. தேள் முத்திரைகள்
20. கண்ட பேருண்ட முத்திரைகள்
21. பல்வேறு வகையான முத்திரைகள்
22. கோயில் முத்திரைகள்
23. மாத்வர் முத்திரைகள்
24. வைணவ முத்திரைகள்
25. தனியார் முத்திரைகள்
26. நவாபு காலத்து முத்திரைகள்
27. தனிநபர் முத்திரைகள்
28. மர முத்திரைகள் (விவசாயம்)
29. மராட்டியர் முத்திரைகள்

இயல்- இரண்டு

மோதிரங்கள்

1.பெருங்கற்கால குறியீட்டு மோதிரம்
2. அடையாளக் குறியீட்டு முத்திரை மோதிரங்கள்
3. சங்ககால எழுத்துப் பொறிப்புள்ள மோதிரங்கள்
4.சங்க கால எழுத்துப் பொறிப்பு இல்லாத மோதிரங்கள்
5. இலச்சினை பொறித்த முத்திரை மோதிரங்கள்
6. பிற்காலச் சோழர் மோதிரங்கள்
7. பல்லவர் கால மோதிரங்கள்
8. நந்தி மோதிரங்கள்
9. மயில் மோதிரங்கள்
10. சோழர்கால மோதிரங்கள்
11. சங்கு மோதிரங்கள்
12. நாய் மோதிரம்
13. குதிரை மோதிரம்
14. மோதிரக் கல்லில் உருவங்கள்
15. அனுமன் மோதிரங்கள்
16.பாண்டியர் முத்திரை மோதிரங்கள்
17. வராக மோதிரங்கள்
18. லிங்க மோதிரங்கள்
19. சிங்க முத்திரை மோதிரங்கள்
20. மீன் மோதிரங்கள்
21. மராட்டியர் மோதிரங்கள்
22. ஓர் எழுத்து மோதிரங்கள்
23. பெயர் பொறித்த மோதிரங்கள்
24. பல்வேறு வகையான மோதிரங்கள்
25. தெலுங்கு மோதிரங்கள்
26. நவாபு காலத்து மோதிரங்கள்
27. நவாபு காலத்து மோதிரங்களிலிருந்து விழுந்த தகடுகள்
28.மராட்டியர் கால மோதிரங்களிலிருந்து விழுந்த தகடுகள்
29. மராட்டியர் கால மோதிரங்கள்

சான்றெண் விளக்கம்

துணைநூற்பட்டியல்

Weight1 kg