Description
திருப்பரங்குன்றம்: ஒரு முழுமையான வரலாற்று ஆய்வு
கார்த்திகை தீபம் குறித்து எழுந்த விவாதங்களுக்கான விடையாக மட்டும் சுருங்கிவிடாமல், திருப்பரங்குன்றத்தின் முழுமையான வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியே இந்நூல்.
பரங்குன்றம் மலையின் புவியியல் தோற்றம் தொடங்கி, மதுரையின் அரசியல், வழிபாட்டு முறைகள், சிக்கந்தர் தர்ஹா, முருக ராவுத்தர் – சிவ ராவுத்தர் கதையாடல்கள், சனாதனம் மற்றும் மதச்சார்பின்மை அரசியல் வரை 13 முக்கியத் தலைப்புகளில் வரலாறு விரிகிறது.
இந்நூலுக்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எழுதிய 78 ஆங்கில நூல்கள், அரிய உருது மற்றும் அரபு மொழி நூல்கள், மற்றும் தமிழ் நூல்கள் என மொத்தம் 164 நூல்களிலிருந்து சான்றுகள் திரட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நூலின் அடிக்குறிப்பில் முறையாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
கீழ்கண்ட 13 பகுதிகளாக நூல் எழுதப்பட்டுள்ளது.
1.பரங்குன்றம் மலையின் தோற்றம்
2.மதுரையில் மனிதர்கள் வாழ்ந்த வரலாறு
3.மதுரையின் அரசியல் வரலாறு
4.பரங்குன்றத்து வழிபாட்டு வரலாறு
5.முருக வழிபாட்டைப் புறக்கணித்த பிறமலைக்கள்ளர்களின் எதிர்சமய வரலாறு
6.தர்ஹாக்கள் உருவான வரலாறும்
முருக ராவுத்தரும், சிவ ராவுத்தரும்
7.சிக்கந்தர் தர்ஹா தோற்ற வரலாறு
8.கார்த்திகை தீப வரலாறு
9.உலக, இந்திய,தமிழ்நாடு நிலவரை வரலாறு
10.இந்து சமய அறநிலையத்துறை வரலாறு
11.மீனாட்சி கிளி மூலம் சிவன் சொல்லும் மதநல்லிணக்கம்
12.சனாதன வரலாறு
13.மதங்களும்-அரசியலும்-மதச்சார்பின்மையும்
இந்நூலுக்குத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதுநிலை கல்வெட்டு ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் ஆ. பத்மாவதி அவர்கள் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
மொத்த பக்கங்கள்: 175
வரலாறு, அரசியல் மற்றும் மதநல்லிணக்கம் குறித்துத் தேடல் உள்ளவர்கள் வாசிக்க வேண்டிய 175 பக்க ஆவணம்.





Reviews
There are no reviews yet.