வேளிர் ஆட்சி தொடக்க வரலாற்றுக் காலத்தில் இருந்த ‘ராஜன்’ ஆட்சிமுறையோடு ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. வேளிர் எழுச்சிக்குப் பொதுவாக அவரவர் ஆட்சிப் பகுதியிலிருந்த கனிமவளம் பெரிதும் துணை செய்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. வேந்தர்- தொல்குடிகள் உறவு பற்றியும், வேந்தர் வேளிர் உறவு பற்றியும் விரிவாகச் சொல்கிறார். வேந்தர்தாம் முதன்முதல் நான்கு நிலங்களையும் (அதாவது நான்கு திணைப் பகுதிகளையும்) ஒரு சேர ஆளும் தலைவர்களானார்கள். வேந்தர் தோற்றம் பற்றி நிலவிவந்த பல தொன்மங்கள் அவர்கள் எழுச்சிக்கு உதவின என்பதோடு அவை வட இந்திய அரச குலங்கள் தொடர்பான தொன்மங்களோடு ஒப்பிடப்படுகின்றன.
பண்டைய தமிழகம் பற்றியும், பண்டைய தமிழ் இலக்கியங்கள் பற்றியும் விரிவான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சங்க இலக்கியப் பதிப்புகளும் மறுபதிப்புகளும் நடந்த வண்ணம் உள்ளன. கற்றுத் துறைபோகிய இலக்கிய அறிஞர்களும், வரலாற்றறிஞர் களும், தொல்லியல் அறிஞர்களும் சங்க இலக்கியம் பற்றி ஆய்ந்து வருகின்றனர். இருப்பினும் ஆய்வு முடிவுகள் தெளிவாக அமையவில்லை. இலக்கியங்களில் பயின்று வரும் பாட பேத ஆராய்ச்சி முழுமை பெறவில்லை. மேலும் சங்க இலக்கியம் கால அடைவில் வரிசைப் படுத்தப் பெறவில்லை. பண்டைய சங்க இலக்கியம் பாடப்பெற்ற கால இடைவெளி பல நூற்றாண்டுகள் இருக்கலாம் என்று கருதப் பெறுகின்றது. இந்தக் கால இடைவெளியில் சமூகம் மாற்றமின்றி நிற்கவில்லை. மாறிக்கொண்டிருந்த சமூகம் பற்றி இலக்கியம் ஓரளவிற்குத்தான் சான்றுகளை அளிக்கின்றது. தொல்லியல் தரவுகள் இந்தக் குறையைப் போக்கமுடியும்.
தமிழகத் தொல்லியல் தொடக்கநிலையிலேயே உள்ளது. தமிழக அகழாய்வுகள் குறைந்த அளவிலேயே நடைபெற்றுள்ளன. அதனால் பண்டைய தமிழ்ச் சமூகம் பற்றிய முழுச்சித்திரம் கிடைக்கவில்லை. பண்டைய நகரங்களை அகழ்வு செய்வதில் பல தடைகள் உள்ளன. தொடர்ந்து வாழ்விடங்களாகப் பண்டைய நகரங்கள் உள்ளன. அதனால் பரப்பளவு ஆய்வு நடைபெறுவதில் சிக்கல்கள் உள்ளன. பரப்பளவு ஆய்வு நடைபெறுவதில் சிக்கல்கள் உள்ளன. பரப்பளவு அகழாய்வு நடந்தால்தான் நகரக் குடியிருப்புகளைப் பற்றியும், நகர சமூக அமைப்பை அறிந்து கொள்ளமுடியும். அந்த வாய்ப்பு குறைந்தே காணப்படுகின்றது.
ஊரகத்தொல்லியலில் (Rural Archarology) நாம் கவனம் செலுத்தவில்லை ஒரு பெருங்குறை. பண்டைய ஊரக வாழ்விடங்கள் அகழ்வு செய்யப்பெறும்போது பழங்குடிச் சமூகத்திற்கும், நகரச் சமூகத்திற்குமிடையிலான தொடர்பு அறியப் பண்டைத் தமிழ்ச்சமூகத்தின் முழுச்சித்திரம் கிடைக்கும். மேலும் பழங்குடிச்சமூகம் காலகதியில் வளர்ந்த நிலையையும். முடியும். அறிந்துகொள்ள
சங்ககாலத் தொல்லியல் சான்றுகள் குறைவாகக் கிடைத்திருக்கும் நாடவேண்டியுள்ளது. வரையறுப்பது சங்க இலக்கியம் கால அடைவில் வரிசைப்படுத்தப் பெறவில்லை. நிலையில் இலக்கியச் சான்றுகளை அதனால் பண்டைய தமிழ்ச்சமூகம் தொல்குடி நிலையிலிருந்து அரசு உருவாக்கம் வரை எப்படி மாறி வந்தது என்பதை கடினமாக உள்ளது. இந்த நிலையில் ஒப்பாய்வு முறையைப் கடினமாக உள்ண்டும். வேத, கிரேசெல்ஆகிய மொழி பயன்படுள்ள இலக்கியங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கனில் உன்ளியத்தில் கூறப்பெறும் சமூகம் பற்றி தேவி பிரசாத் வேக டபெத்யாயா, ரோமிலா தாபர், ஆர் எஸ். சர்மா, சுவிரா ஜெய்ஸ்வால் ஆகியோர் செய்துள்ள ஆய்வுகள் சங்ககால சமூகத்தைப் புரிந்து கொள்ள துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை. தாபர் அவர்கள் தொல்குடியிலிருந்து அரசு ஆக்கம் வரை என்ற நூலில் தமிழ்ச்சமூகம் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளது. ஆனால்
சங்ககால அரசியல், வாழ்வியல் பற்றி பல ஆய்வுகள் நடந்துள்ளன. நடந்து வருகின்றன. பல்வேறு ஆய்வியல் நெறிகளைப் பின்பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன. இருப்பினும், மேலும் நெடுந்தொலைவு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். தொல்லியல் ஆய்வில் ஏற்படும் முன்னேற்றமே சங்க இலக்கிய ஆய்வும் பண்டைய தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வும் துலக்கமடைய உதவும்.
சங்க இலக்கியம் ஒரு சுரங்கம். பல கூறுகள் பற்றிய ஆய்வுகள் முழுமை பெற்றுவிட்டன என்று உறுதிப்பட கூறமுடியாது. சமூக வளர்ச்சிக்கும் செய்யுள் வடிவ மாற்றங்களுக்கிடையிலான தொடர்பு பற்றி ஆய்வு தொடங்கப்பெறவேண்டும். சங்க இலக்கியச் சொல்லடைவு முழுமையாகச் செய்யப் பெறவில்லை. மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் அவர்கள் உயிரெழுத்திற்குச் செய்த பணி குறிப்பிடத்தக்கது மேலும் சங்க இலக்கியச் சொல்லடைவில் வேர்ச் சொல் காட்டப் பெறவேண்டும்.
இந்நூல் வெறும் பரிசீலனைதான். இதில் உள்ள கட்டுரைகள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்றவை. முடிந்த வரை கூறியது கூறலைத் தவிர்க்க முயன்றுள்ளேன். கருத்து முரண்பாடுகளையும் விர்க்க முயன்றுள்ளேன்.
நூலாசிரியர் முனைவர் ர.பூங்குன்றன் தமிழ் இலக்கியத்திலும் கல்வெட்டியலிலும் நன்கு தேர்ந்தவர். கூடவே மானிடவியல் போன்ற சமூக அறிவியல் கருத்தாக்கங்களை உள்வாங்கி அவற்றைப் பழந்தமிழக வரலாற்றை விளக்குவதற்குப் பயன்படுத்தி வருபவர். பண்டைய இந்திய வரலாறு தொடர்பாகச் செய்யப்பட்டு வரும் உயராய்வுகளை ஆர்வமாகப் படித்து, அவற்றைத் தமிழக வரலாற்றுக்குப் பொருத்திப் பார்க்க முனைந்து வருகிறார்.
அந்த வகையில் தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தைப் பற்றி இந்த நூலில் ஆழமாகச் சிந்தித்துள்ளார். தொல்குடிகள் தொடங்கி வேந்தர் எழுச்சி முடிய அக்கால அரசியல் மற்றும் சமூகப் போக்குகளை விளக்கியுள்ளார்…
பழந்தமிழகத்தைப் பற்றித் தெளிவு பெறவும். மேலும் ஆராயவும் இந்த நூல் மிகவும் உதவும்.
எ.சுப்பராயலு
தென்னிந்திய வரலாற்று அறிஞர்.