Description
தொல்மனித இனங்களைப் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன. இச்சூழலில் தமிழ் உலகில் தொல்மனித இனங்கள், சேப்பியன்கள், அவற்றின் இடப்பெயர்வுகள் பற்றிய தகவல்கள் சென்றடைய வேண்டிய தேவை இருக்கின்றது.
அந்த நோக்கத்தோடு இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்த நூல் “தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்”. தமிழ் மரபு அறக்கடளை பதிப்பகத்தின் வெளியீடு இது. விலை ரூ 180/-
இதில்..
-ஆப்பிரிக்காவிலிருந்து இடப்பெயர்வுகள்
-நியாண்டர்தால், டெனிசோவன் வகை மனிதகுலம்
-நவீன மனிதர்கள்
-வெவ்வேறு மனித குலங்களுக்கிடையே இனக்கலப்பு
-விவசாயக் குட்டத்தின் இடப்பெயர்வு
-ஸ்டெப்பி புல்வெளி – யம்னயா
-இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்
-இந்திய மரபியல் ஆய்வுகள்
-இந்திய சமூக அமைப்பு
… இன்னும் பல தலைப்புக்களில் ஆராயப்படும் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.
அறிவியல் துறையின் மரபணுவியல் தகவல்கள் தான் மனிதர்கள் தங்களையும். தங்களின் மூதாதையர்களையும். மக்களின் இடப்பெயர்வுகளையும் அறிந்து கொள்ள வழி வகுக்கும். அனைவரும் வாங்கி பயன்பெறுக.