‘200 ஆண்டுகள் ஆட்டு மந்தையாக வாழ்வதை விட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச் சிறந்தது’ என்று சூளுரைத்த பெருவீரன் தியாகச் சுடர் திப்பு சுல்தான்.
வணிகக் கொடிப்பிடித்து வஞ்சக வலை விரித்து இந்திய திருநாட்டை வளைத்துக் கொண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டு வந்தான். சொந்த மண்ணை பாதுகாக்க சபதமெடுத்து, மண்ணின் மானம் காத்து, தன் மானம் காக்க இறுதி மூச்சு உள்ளவரை போராடிய இந்தியாவின் பெரு வீரன் இமலாயப் புகழ் திப்பு சுல்தான் மீது சுமத்தப்படும் பல்வேறு அவதூறுகளுக்கு உரிய ஆதாரங்களுடன் மறுத்துள்ளார் வரலாற்றாய்வாளர்
செ. திவான்.