தொல்காப்பியச் செய்தி

200

Add to Wishlist
Add to Wishlist

Description

காலந்தோறும் தொல்காப்பியத்தின் சிறப்பினைப் பலரும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். பேராசிரியர் சாமி. தியாகராசன் அவர்கள் அவற்றிலிருந்து வேறுபட்டு ஆராய்ந்திருக்கிறார். தொல்காப்பியம் ஏழாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். அதன்பொருட்டுப் பாயிரத்தைப் பயன்படுத்துவது அருமை. தொல்காப்பியம் கூறும் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று பாகுபாடுகள் தொல்காப்பியரின் மொழி ஆளுமையைக் கூறுவதோடு தமிழர் வாழ்வியல் நெறியையும் கூறும் ஒப்பற்ற நூல் என்கிறார். தொல்காப்பியச் சிறப்பினையும், பெருமையினையும் தக்க சான்றுகள் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறார். இந்நூல் தொல்காப்பியப் பாடுபொருள்களைத் தொகுத்து எளிய முறையில் அனைவரும் உணரும் வண்ணம் ஆக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களின் தோற்றுவாயைப் பண்டைய உரையாசிரியர்களின் வழிநின்று எழுதியிருப்பது சிறப்புக்குரியதாகும். தொல்காப்பியத்தில் ஏற்பட்டுள்ள இடைச்செருகல்களை ஆராய்ந்து உரைக்கும் இடத்தில் “ஒரு பழமையின் உண்மையைக் கண்டறிய வேண்டுமானால் அதற்குத் துணைசெய்ய வெளிச்சான்றைவிட அகச்சான்றையே முதன்மைப்படுத்த வேண்டும்” என்று கூறியிருப்பது சிறப்புக்குரியதாகும்.

Additional information

Weight1 kg