Description
உரைகல்
பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்றிய கட்டுரை, நமது பண்பாட்டில் மருத்துவம், திராவிட இயக்கச் சார்பு, நாட்டார் வழக்காற்றியல் ஆகிய புரிகளைக் கொண்ட நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உ.வே.சா. அவர்களின் சங்க இலக்கிய மீள் கண்டுபிடிப்பே வைதீகத்துக்கு மாற்றான ஒரு பெரும் பண்பாடு தென்னிதியாவில் பிறந்து வளர்ந்த வரலாற்று உன்மையினைத் தமிழ்நாட்டுக்கு எடுத்துக் காட்டியது அதுவே தமிழ்த் தேசிய இன அடையாளத்தைக் கண்டது. திராவிட இயக்கத்தார்க்கும் முற்போக்கு இயக்கத்தார்க்கும் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கான திசையினையும் காட்டியது என்று இந்நூளில் தொ.ப. மதிப்பிடுவது கவனத்துக்குரியது




