Description
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகிற்கே வழி காட்டும் அறக் கருத்துகளை முன்வைத்தார் – தமிழனப் பேராசான் ஐயன் திருவள்ளுவர்! அவருக்குக் காவி – கருப்பு என அவரவர் தங்கள் தேவைக்கேற்ப வண்ணம் பூசும் பணி நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில், அவரது உண்மையான குரலை குறளிலிருந்து – வெளிக்கொணரும் முயற்சியாகவே “வள்ளுவரின் மேலாடை வெள்ளை!” என்ற இந்நூல் வெளி வருகிறது. திருக்குறளில் காணப்படும் கருத்துகளைத் தொகுத்து, அவை குறித்த இன்றைய உலக ஒழுங்கமைப்புக்கு ஏற்ப கருத்துகளையும் உள்வாங்கி, குறளின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிக் கொணர்ந்துள்ளார் நூலாசிரியர். தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமான திருவள்ளுவரையும், திருக்குறளையும் நேசிப்போர். உள்வாங்கி உணர விரும்புவோர் அனைவரும் படிக்கத்தக்க நூல் இது!






























