கண்ணகி மதுரையை எரித்துவிட்டு வைகைக்கரை வழியாக நடந்து சென்று மங்கலமலையில் மங்கலதேவியாகிய நிகழ்ச்சியை மன நெகிழ்வோடு வரலாற்று நோக்கில் ‘மங்கலதேவி கண்ணகி கோட்டம்’ என்ற இந்நூல் எடுத்தியம்புகின்றது.
இதில் கண்ணகிக்கு கோட்டம் எழுப்பிய சேரனைப் பற்றியும் அதன் பிறகு வந்தவர்கள் மங்கலதேவி கோட்டத்திற்கு ஆற்றிய அறப்பணிகளும் கோர்வையாகவும் எளிமையாகவும் எடுத்துரைக்கப்பெற்று படிப்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. சிலம்பைப் பற்றியும், மங்கலதேவி குறிந்த ஆய்வு குறித்தும் பல்வேறு அரிய தகவல்கள் நிறைந்த ‘தகவல் பேழையாக இந்நூல் அமைந்து தமிழன்னைக்கு அணி செய்கின்றது.