செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனச் செம்பதிப்பு வரிசையில் இது ஐந்தாவது வெளியீடாகும். மூலபாடம், பாடத்தேர்வு விளக்கம், சுவடி விளக்கம், பதிப்பு விளக்கம், பிழைப்பாடப் பட்டியல், தொல்காப்பிய இயைபுகள், ஒப்புமைத் தொடர்கள், சொல்லடைவு, தொடரடைவு, கலைச்சொற்கள் முதலான செம்பதிப்புக்குரிய கூறுகளுடன் இந்த ஐங்குறுநூற்றுப் பாலைத் திணைப் பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சுவடிகளை அடிப்படையாகக் கொண்டும் சுவடிகளின் அடிப்படையில் பதிப்பிக்கப்பட்ட பழம் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டும் இச்செம்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது; பழந்தமிழ் இலக்கண, இலக்கிய மரபுகள் வழிநின்று இச் செம்பதிப்பில் பாடத்தேர்வுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்தரும்.