மறவர்க்கு அளிக்கப்படும் பட்டங்கள் :
மறவர்களுக்கு வேந்தன் செய்யும் பல சிறப்புகளில் பட்டங்கள் அளித்துப் போற்றுவதும் ஒன்றாம். இதன்படி ஏனாதி, காவிதி முதலிய பட்டங்களைச் சிறப்பு வாய்ந்த படைத் தலைவர்களுக்குச் சூட்டுவதுண்டு. இதனை “மாராயம்” என்று குறிப்பிடுகிறது தொல்காப்பியம். இப்பட்டங்களைச் சூடும்பொழுது அதற்குரிய மோதிரம் ஒன்றும் அரசனால் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனை ‘மாராயம் பெற்ற நெடுமொழியானும்’ என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் கொடுக்கப்பட்டிருக்கும் பழம்பாடல் ஒன்றால் அறியலாம். இக்காலத்தில் சிறந்த தொண்டு புரியும் படைத் தலைவர்களுக்குப் ‘பரம வீர் சக்கரம்’. ‘வீர் சக்கரம்’ போன்ற பட்டங்களை அளிப்பதும் அதற்குரிய அடையாளச் சின்னங்களை மார்பில் அணிவிப்பதும் ஈண்டு கருதற்பாலன.இப்பட்டம் பெற்றவர் அமைச்சராவ துண்டு. மணிமேகலையில் ஒரு காதைத் தலைப்பில் ‘மந்திரியாகிய சோழிக ஏனாதி’2 என வருவதால் இப்பட்டத்தார் அமைச்சராகவும் சிறப்புப் பெற்றிருந்தனர் என்பது விளங்கும். இப்பட்டம் பெற்றுச் சிறந்து விளங்கிய மறவர்களை அகவை முதிர்ந்த காலத்தில் அமைச்சராகவும் அரசர்கள் நியமித்தனர் போலும்.
ஏனாதிப்பட்டம் பெற்ற சிலர் குறுநில மன்னர்களாகவும் உயர்ந்திருக்கின்றனர். கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் எனும் புலவரால் பாராட்டப்பெற்ற” ஏனாதி திருக்கிள்ளி என்பான் சோழநாட்டுக் குறுநில மன்னருள் ஒருவனாவான். இவன் படைத்தலைவனாக இருந்து சோழ வேந்தர்க்குப் படைத்துணையாய்ப் பலபோர்களைச் செய்து மேம்பட்டு இப்பட்டம் பெற்றுக் குறுநில மன்னனாக உயர்ந்திருத்தல் வேண்டும். படைத்தலைவர்களுக்குச் செல்வமிக்க நாடுகள் சிலவற்றையும் அரசன் பரிசாக வழங்கும் வழக்கம் இருந்ததனால் ‘ நாடுகளைப் பெற்ற படைத்தலைவர்கள் நாளடைவில் முடிமன்னர்க்குத் திறையும் படைத்துணையும் நல்கும் குறுநில மன்னர்களாக உயர்ந்தனர் எனலாம்.இக்குறுநில மன்னர்களுக்கு வில்லும் வேலும் கழலும் கன்னியுன் தாரும் ஆரமும் தேரும் மாவும் வைத்துக்கொள்ளும் உரிமை இருந்தது.15 ‘ஏனாதி பாடியம்’ என்னும் குறிப்பு கலித்தொகையில் வருகிறது.” இது குறுநில மன்னனொருவன் பரத்தையர் வாழ்வதற்குக் கட்டிக்கொடுத்த சேரியாகும். ‘ஏனாதி ஏறன்’.’ ‘ஏனாதி நாதநாயனார்’* எனவரும் இடைக்காலத்தவரும் இப்பட்டம் பெற்றுச் சிறந்த மறவர்களே எனலாம்.
ஆட்சி நிருவாகத்தில் மறவர் :
நாட்டில் அறத்தோடு கூடிய ஆட்சி நிலவ வேண்டுமென்றே மன்னர் பெரிதும் விரும்பினர். ஆட்சி நிருவாகத்தில் தமக்குத் துணை நிற்கும் பொருட்டுச் சில குழுக்களை அமைத்திருந்தனர். சங்கமருவிய காலத்தில் அரசனுக்கு அறிவுரை வழங்கவும் தக்க நேரத்தில் உதவி செய்யும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற இரு பேரவைகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.”
4.1.1 அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதர், ஒற்றர் ஆகியோர் ஐம்பெருங்குழுவிலும்; கரணத்தியலவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி மறவர் ஆகியோர் எண் பேராயத்திலும் இடம் பெற்றிருந்தனர்.
சங்க காலத்தில் இவைபோன்ற அமைப்புகள் இருந்தனவா என்பது ஆய்தற்குரியது. மதுரைக் காஞ்சியில் நால்வரும் ஐவரும்” அடங்கிய குழுக்கள் இருந்தமைக்கான குறிப்புகள் காணப்படுகின்றன. மதுரைக் காஞ்சியில் குறிப்பிட்டுள்ள ‘நாற்பெருங்குழு’ என்பது மேற்கூறிய ஐம்பெருங்குழுவேயாகும் என்பார் நச்சினார்க்கினியர்.” அமைச்சரைத் தவிர்த்த ஏனையோர் அடங்கியதே நாற்பெருங்குழு என்பது அவர் கருத்தாகும்.
சிலப்பதிகாரமும் பத்துப்பாட்டும் வெவ்வேறு காலத்தனவாதலின் நச்சினார்க்கினியர் கருத்து ஏற்புடைத்தன்று என்பார் சு. வித்தியானந்தன்.சங்க காலத்தின் பிற்பகுதியில் சமயத்தொடர்பான அலுவல்களில் பார்ப்பனர் ஓரளவிற்குச் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்றாலும் அரசியல் அலுவல்களில் அவர்கள் ஆதிக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது என்பதும் அவர் கருத்தாகும்.” அவ்வாறாயின் புரோகிதர் நீங்கலாக அமைச்சர், சேனாதிபதி, தூதன், ஒற்றன் ஆகிய நால்வரும் அமைந்த குழுவே நாற்பெருங்குழுவாயிருந்திருத்தல்வேண்டும். இஃதெவ்வாறிருப்பினும் சிலப்பதிகாரம் காலத்திற்கு முன்பே ஐம்பெருங்குழு எண்பேராயம் போன்ற அமைப்புகள் இருந்தன என்பதும் அவை உண்மையான கருத்துக்களை அரசனுக்கு அஞ்சாது எடுத்துரைக்கும் பண்பினவாய் விளங்கின என்பதும் அவற்றில் மறவர்களுக்கும் தக்க ஒதுக்கப்பட்டிருந்ததென்பதும் தெளிவாம். இடம்
இதுகாறும் கூறியவற்றால் சமுதாயத்தில் மறவர்,படைவீரர், படைத்தலைவர், அமைச்சர் ஆகிய பொறுப்புக்களை ஏற்றும் அரசவை நிருவாகத்தை மேற்கொள்ளும் குழுக்களில் இடம் பெற்றும் கடமையாற்றினர் என அறியலாம். (நூலிலிருந்து)
சங்ககால மறவர் – டாக்டர் சு. முத்தையா
விலை:180 /-
வெளியீடு: காவ்யா பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/sangakaala-maravar-dr-s-muththaiya/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers