தனது வீட்டில் இவ்வாண்டு நவராத்திரி விழாவினை முன்னிட்டு அவர் அமைத்துள்ள கொலுவினைக்கான நமது இதழின் வாசகரும், கட்டடக்கலை நிபுணருமான, திரு. கார்த்திக் மகாலிங்கம் எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் உள்ள அவரின் அழைப்பை ஏற்று சென்ற வாராம் ஒரு நாள் கொவிலம்பாக்கதில் உள்ள அவரது வீட்டில் வைத்திருந்தக் கொலுவினைக் காணச் சென்றோம்.
அவரது வீட்டின் வரவேற்பு மற்றும் உள்ள அறை இரண்டிலும் கொலு மிக அழகாக அமைக்கபட்டிருந்தது. அவர்கள் படிகள் அமைத்து மேல் வரிசைகளில் தெய்வ உருவங்களையும், அதன் கீழ் உள்ள வரிகளில் அவர்களின் புராணக்கதைகளைக் கூறும் காட்சிகளும் வரிசையாக அமைக்கப்படிருந்தது.
கீழே உள்ள படிகளில் அன்றாட வழக்கை நிகழ்வுகளைக் கூறும் கட்சிகளும் வைக்கப்படிருந்தன.
அக்கொலுவில் வைக்க நாங்கள் வாங்கிச்சென்ற ரங்கநாதரை அவருக்கு பரிசாக அளித்தோம்.
கொலுவில் வைக்கப்படிருந்த சிலைகளைப் பற்றி அவரின் தாயார் அவர்கள் நமக்கு விளக்கம் அளித்தார்கள்.
முதலில் அழகாக அலங்கரித்து வைக்கப்படிருந்த கல்கத்தா காளியினைப் பற்றிய புராணக்கதைகளையும், நம்பிக்கைகளையும் பற்றிக் கூறினார். இரண்டாவதாக இருந்த உருவம் சீரங்கம் ரங்கநாயகியின் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது, கையில் வீணையுடன் இருந்த கலைவாணியின் கொள்ளை அழகுடன் இருந்த அலங்காரம் எங்களை மெய்மறக்கச் செய்தது.
பின்பு குருவாயூர் யானை ஊர்வலக் கட்சியினை தத்ரூபமாக அமைத்திருந்தனர். (அடுத்தப் பக்கத்தில் புகைப்படத் தொகுப்புகள் உள்ளன). அதன் பிறகு ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ராமர் வனவாசம் செல்லும் நிகழ்ச்சியும் அமைக்கபட்டிருந்தது.
குகனுடன் ராமர், லக்ஷ்மணன், சீதை ஆகிய மூவரும் படகில் செல்லும் கட்சி மிக அழகாக இருந்தது. சைவ முறையின் மீனாட்சி சுந்தரர் கலியாணக் காட்சிகளும், புரானக்காட்சிகளும், வைணவ முறையின் தசவதாரக் காட்சிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
செழிப்பின் அடையாளமாக பல்போருட்களை விற்பனை செய்யப்படும் செட்டியார் கடையானது அழகாக வைக்கப்டிருந்தன.
மனித வாழ்வின் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும் உறவினர்கள் கூடிக் கொண்டாடும் திருமண நிகழ்ச்சியும், அதன் தொடர்ச்சியாக வளைகாப்பு நிகழ்ச்சியும் அமைக்கபட்டிருந்தது.
அந்நிகழ்ச்சிக்கு வரும் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்றும், பெண் பிள்ளைகள் பூங்காவில் ஊஞ்சலாடுவது போன்றும் காட்சிகள் கதை சொல்லும் விதமாக இருந்தன.
காலையில் வீட்டில் இருந்து வயலுக்கு கிளம்பும் தொழிலாளர்கள், வயலில் ஏர் உழுவும் விவசாயிகள், நாற்றுகளை பிடுங்கி நடுவோர், நேரக் கதிர்கள் நன்கு வளர்ந்த பிறகு அதனை அறுவடை செய்து போர் அடிக்கும் கூலித் தொழிலாளர்கள், மூட்டைகளை பண்ணை வீட்டிற்கு எடுத்துசெல்லும் மாட்டுவண்டி, அதனை மேற்ப்பார்வை செய்யும் கணக்குப்பிள்ளை, பின்பு அவை சந்தைக்கு எடுத்தச் செல்லப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது போன்ற கட்சிகள் நம்மை ஒரு கிராமப்புற வாழ்வுக்கே கூட்டிச் செல்வதாக இருந்தது.
இக்கொலுவில் அழகோடு, ஆச்சரியமான ஒரு விசயமும் எங்களுக்கு காத்திருந்தது. ஆம் மேலே உள்ள படத்தில் உள்ள அந்தச் மண் பொம்மை தான் அது. வலது புறத்தில் உள்ளது சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த சுமேரிய நாகரீகத்தின் துவக்கக் கலாச்சாரமான உபைடு கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும் பல்லி/பாம்பு இன மனிதர்களின் உருவங்களை ஒத்துக் காணப்பட்டது. உபைடு கலாச்சாரமானது கட்டடக்கலைக்கு பெயர்போன ஒன்றாகும்.
இவ்வுருவம் மனிதரின் உடலுடன், அதன் தலை மற்றும் உடலானது பாம்பு போன்ற வடிவலானதுமாக உள்ளது. அதன் தலையில் தட்டை வடிவிலான கிரீடம் உள்ளது. ஏழாயிரம் ஆண்டு பழமையான அந்தப் பொம்மையைப் போன்றே கொலுவில் இருந்த அந்தக் கரு நிற பொம்மையானது இருந்தது.
வித்தியாசனமாக இருக்கும் இப்பொம்மை கல்கத்தாவில் காளி என்று அழைக்கப்டுவதாக கார்த்திக் கூறினார். நெடுநேர உரையாடலுக்குப் பிறகு இரவு உணவுடன் நாங்கள் விடைப்பெற்றுக்கொண்டோம்.