Team Heritager July 27, 2023 0

ஓவியர் மாருதி மறைவு

இரங்கல்: சிறுவயதில் என்னை ஈர்த்த பல ஓவியங்களை உருவாக்கிய ஓவியர் மாருதி இன்று மறைவு.

புதுக்கோட்டையில் பிறந்தவர் ரங்கநாதன், (வயது 86) என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி. 1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். குமுதம், குங்குமம் ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.

வார இதழ்களில் தொடர்ந்து ‘ஃபோட்டோபினிஷிங்’கில் அமையும் இவருடைய ஓவியங்கள் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கது

புணே நகரில் மகள் வீட்டில் தங்கியிருந்த அவர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று, ஜூலை 27 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காலமானார்.

இவருக்கு சுபாஷிணி, சுஹாசினி இரு மகள்கள் என இருக்கின்றனர்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்.

ஓவியர் மாருதியின் பேட்டி: http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16389&id1=4&issue=20200103

Category: