மேசிடோனியர்களும், கிரேக்கர்களும், மாவீரன் அலெக்ஸாண்டரும் இந்துகுஷ் மலைப் பகுதிக்கு வந்தனர். கடவுளின் பிரதேசம் என்று போற்றப்படுகிற, ஒலிம்பஸை விடவும் உயரமான காடுகள் நிறைந்த பனி படர்ந்த மலைப் பகுதிகள் அவர்களை மயக்கின. சிகரங்களுக்கு இடையே ஏற்படும் சூரிய உதயமும், அஸ்தமனமும் கண்களுக்கு ரம்மியமான காட்சியைத் தந்தன. வானத்தில் தேவர்கள் வசிக்கும் தேவலோகங்கள்; சொர்க்கத்தில் சிவனுக்குக் கைலாசம், விஷ்ணுவுக்கு வைகுண்டம்; அசுரர்கள்; ஐந்து குதிரைகள் பூட்டிய தங்கத்தாலான ரதத்தில் சூரிய தேவன் ஒவ்வொரு நாளும் ஆகாயத்தில் பறந்து செல்வது; பூமியில் விஷத்தைக் கக்கும் பிரம்மாண்ட பாம்புகள், செக்கச் சிவந்த கண்களுடன் மாமிசம் உண்ணும் ராட்சஸர்கள்; பாதாள உலக உயிரினங்கள் ஆகியவை குறித்த கதைகள் அவர்களை அதிசயப்படவும், ஆச்சரியப்படவும் வைத்தன.
பாரத தேசம் அகத்தே கலைகளிலும், பண்பாட்டிலும், தீவிர கவனம் செலுத்திக்கொண்டிருந்த தருணத்தில், மேசிடோனியர்கள் புறத்தே போர்களில் உலகை வெல்லுவதில் நாட்டம் மிக்கவர்களாக இருந்தனர். மேசிடோனியர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாத பாரத் மன்னர்களே இல்லையென்று சொல்லும் வகையில் தொடர்ந்து தாக்கப்பட்டனர். சிதறுண்ட ராஜ்ஜியங்கள், ஆட்சியாளர்கள் இடையே நம்பிக்கையின்மை, ஒற்றுமையின்மை ஆகியவை காரணமாக மேசிடோனியர்களுக்கு பாரத மன்னர்கள் மிக எளிதாக இலக்கானார்கள்.
இக்கால கட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் இன்னும் புதிராகவும்,மர்மமாகவும் உள்ளன. இந்தியாவுக்கு அலெக்ஸாண்டர் வரவேண்டிய காரணம் என்ன? அவர் இளம் வயதில் ஏன் இறந்து போனார்? சந்திரகுப்த மௌரியனின் மூலம் என்ன? அந்தச் சாதாரண இளைஞன் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தின் மன்னனானது எங்ஙனம்? ஒரு சாதாரண பிராமணனாகிய சாணக்கியர் எங்கிருந்தோ வந்தவனை அரியணை ஏற உதவியது எப்படி ? சாம்ராஜ்ஜியத்தை வெற்றிகரமாகக் கட்டியாளும் அசாதாரண ஆற்றலும் திறமையும் சந்திரகுப்தனுக்கு எங்கிருந்து வந்தது? அவனுடைய முக்கியத் தளபதிகள் யார் யார்? போர்களில் வெற்றி வாகை சூட அவனுக்கு உறுதுணையாக இருந்தவர் யார்? கேள்விகளுக்கு முடிவேயில்லை.
மர்மமும், புதிரும் நிறைந்த இந்த வரலாற்றில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகளும், இணைக்கப்படாத பல புள்ளிகளும் உள்ளன. ருத்ரா மிகச் சுலபமாகப் பண்டைய இரகசியங்களைக் கண்டுபிடித்ததுடன், மர்மத்தை உடைத்து, புதிரை விடுவித்து, இணைக்கப்படாத புள்ளிகளையும் சேர்த்து அழகிய கோலமாக்குகிறான். அலெக்ஸாண்டர் மற்றும் சாணக்கியர் காலத்தில், இரண்டாம் அவதாரத்தில் (ஜனனம் இரண்டு), ஒன்பது அடையாளம் தெரியாத வீரர்களின் படைத் தலைவனான ருத்ரா, தனது ஆற்றல் மற்றும் நுண்ணறிவு மூலம் நமது சீரிய வரலாற்றில் புதைந்து கிடக்கும் பல உண்மைகளை வெளிக் கொணர்ந்து பல புதிர்களுக்கு விடை காண்கிறான்.
வரலாறு என்பது ஓர் இருள் காடு. நமக்குத் தெரிந்த ஒவ்வொரு உண்மைச் செய்திக்கும் பின்னால் அறிந்துகொள்ளமுடியாத ஓராயிரம் மர்மங்கள் புதையுண்டு கிடக்கின்றன. அந்த மர்மங்களைப் புரிந்துகொள்ள ஒரே வழி, புனைவை நாடுவதுதான்.
இந்தியா அதிசயங்களின் பூமி என்று சொல்லப்படுவது உண்மையா? கிரேக்கத்தில் இருந்து அலெக்சாண்டர் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தது ஏன்? உலகால் வெல்லமுடியாத மாவீரரருக்கு இந்தியாவில் நடந்தது என்ன? அவர் இறந்தது ஏன்? எளிய பின்னணியைச் சேர்ந்த சந்திரகுப்த மௌரியர் இந்தியாவின் முதல் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பியது எப்படி? அவருக்கு உதவியவர்கள் யார்? ‘விதியின் சிறையில் மாவீரன்’ நாவலைத் தொடர்ந்து வெளிவரும் இந்த இரண்டாவது கதை ருத்ராவின் இரண்டாவது அவதாரமாக விரிவடைகிறது. தனது அசாதாரணமான துப்பறியும் திறனால் பெருமைமிகு பாரதப் பண்பாட்டின் அடியாழத்திலுள்ள அதிசயங்களையெல்லாம் கண்டறிந்து வெளிப்படுத்துகிறான் ருத்ரா. சரித்திர நாவல் உங்களுக்குப் பிடிக்குமென்றால் இந்த அபூர்வமான கதை உங்களுக்குதான்.
சிந்து சமவெளி சவால் –
துர்காதாஸ் (ஆசிரியர்), ஜனனி ரமேஷ் (தமிழில்)
235/-
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.