ஒப்பியல் பார்வையில் ஊர்ப்பெயர்கள்
ஒப்பீட்டு முறையில் இரு களங்களை எடுத்து ஆயும் போது அவை அடிப்படையில் ஒற்றுமையும் , பிறவற்றுள் வேறுபாடும் கொண்டு இலங்குதல் வேண்டும் . இந்நிலையில் தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் தமிழ் மொழியால் , வாழும் தமிழ் மக்களால் , தமிழகத்திற்கு நெருங்கிய நில அமைப்பால் , ஒற்றுமையுடையனவாகவும் , பிறமொழியினர்ச் சார்பு , மாறுபாடு போன்ற பலவித சூழல் காரணமாக வேற்றுமையுடையனவாகவும் திகழ்வதனைப் பொது நிலையில் மேலோட்டமான பார்வை தருகிறது . எனவே இப்பெயர்கள் ஒப்பாய்வு நிலையில் அணுகுவதற்கு வாய்ப்புத் தருகின்றன . இந்த ஊர்ப்பெயர்களை ஒப்பியல் நோக்கில் ஆயும்போது , இரு நாட்டின் ஊர்ப்பெயர்களிலும் காணப்படும் ஒற்றுமை , வேற்றுமை , குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பெயர்கள் இருப்பதன் அடிப்படை , இல்லாமைக்குரிய காரணங்கள், மிகுதி , குறைவிற்கான காரணங்கள் இவை புலப்படுத்தும் சிந்தனைகள் , வரலாற்றுப் பார்வையில் , சிறப்பாகத் தமிழரின் குடிப் பெயர்ச்சி தொடர்பான எண்ணங்கள் அனைத்தும் வெளிப்பட வாய்ப்புண்டு .
எனினும் இவ்வாய்வில் சில கூறுகளே புலப்படு எதிர்பார்க்கும் சிந்தனைகள் அனைத்தும் புலப் படாமைக்குரிய காரணங்கள் எனினும் அறிஞர்கள் பலரின் பார்வைபடாதும் , காலத்தின் , வரலாற்றின் சுவடுகள் ஆழப்பதிந்தும் , பதிந்தன தேய்ந்தும் காணப்படும் ஊர்ப்பெயர்கள் பலகோணப் பார்வை யில் புதிய சிந்தனைகளைத் தருதலுக்கு வாய்ப்பு தருவன என்ற எண்ணத்தில் , இலக்கியத்தில் ஊர்ப்பெயர்களை த் தொடர்ந்து தமிழக ஊர்ப்பெயர்கள் , இதனைத் தொடர்ந்து ” ஒப்பீட்டு நோக்கில் ஊர்ப்பெயர்கள் இவ்வாய்வு தொடர்ந்து அமைகின்ற நிலையைச் சுட்ட வேண்டும்.
இந்நிலையில் ஆசை பற்றி அறையலுற்ற இவ்வாய்வு ஒரு சோதனை முயற்சியேயாகும் . முழுமையான , நுண்மையான , துல்லியமான ஆய்வு முடிவுகள் இங்கே பெறப்படாமைக்குரிய காரணங்களாகச் சிலவற்றைச் சுட்டலாம் . 1. தமிழகம் இலங்கை இரண்டு நாட்டுப் பகுதிகளிலும் அனைத்து ஊர்ப்பெயர்களும் ஆய்வுக்குட் படுத்தப்படவில்லை . 2. தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் அனைத்தும் இதுவரையிலும் தொகுக்கப்படவில்லை ; எனவே . இன்னமும் தனித்தனியே ஊர்ப்பெயர்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படவில்லை . தனிமனித சாதனையுள் அடங்காத இவ்வாய்வுப் பரப்பு ,
குழுவினரின் பார்வைக்குள் படவும் இல்லை . 3. தமிழக கிராமங்களின் அகர வரிசைப்பட்டி நூல் போன்று கூட , இலங்கை ஊர்ப்பெயர்கள் கிடைக்கும் நிலை இல்லை . எனவே , இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு ஊர்ப் பெயர்கள் , சில ஆய்வு நூல்களில் கிடைத்தனவே இவண் தரவுகளாக அமைகின்றன . 4. ஊர்ப்பெயர் ஆய்வு களப்பணியால் அன்றி முடிவு பெறுவதில்லை என்ற கி . நாச்சிமுத்துவின் எண்ணம் . இங்குத் தமிழகமோ , இலங்கையோ களப்பணி செய்யப்படவில்லை . இக்குறைகள் அனைத்தையும் உணர்ந்து இருப்பினும் , சில செய்திகள் , சில கருதுகோள்கள் மேலும் உறுதிப் பெறுவதற்கு வாய்ப்பு
என்றதொரு, சிந்தனை அமைகின்ற காரணத்தால், இங்கு முன்னமே சொன்னது போன்று, இவண் ஆய்வு செய்ய பரந்ததொரு ஆய்வுக்களம் உண்டு ; ஆய்வுச் சிந்தனைகள் பல வெளிப்படவும் வாய்ப்புண்டு என்ற நோக்கில் இவ்வூர்ப்பெயர்கள் ஆய்வுக்குட் படுத்தப்படுகின்றன
Download: Tamil Nadu – Sri Lanka Place Names – A Comparative Study
Creator: Tamil Digital Library
Publisher: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை)