தூங்கானை மாடக் கோயில்கள் – முனைவர் பி.சத்யா

கோயில்கள் வழிபாட்டுத் தளங்களாக மட்டும் அல்லாமல், சமூக கூடங்கலாகவும் திகழ்ந்தன. காஞ்சி மாநகர் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் என பல சமயங்களின் உறைவிடமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புக்களைப் பெற்றுத் திகழும், இம்மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சைவ, வைணவ கோயில்கள், பல காலங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது.

இவற்றுள் தூங்கானை மாட அமைப்பைக் கொண்ட சிவன் கோயில்களின் கலை மற்றும் கட்டடக் கலை அமைப்பினைப் பற்றி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இக்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளின் வாயிலாக நாட்டுப் பிரிவுகள், சமுதாயம், பொருளாதார நிலை, திருவிழாக்கள் மற்றும் பூசைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள மிகச் சிறப்பு மிக்க ஒன்பது கோயில்களின் கலை மற்றும் கட்டடக் கலைப் பற்றி இந்நூல் தெள்ள தெளிவாக விளக்குகிறது.

மகாபலிபுரத்தில் உள்ள சகாதேவ ரதமும், கூரத்தில் அமைந்துள்ள மகாதேவர் கோயில் ஆகிய இரு கோயில்களும் பல்லவர் காலத்திற்கே உரிய கட்டடக்கலை அமைப்பிலான தூங்கானை மாட அமைப்பினை கொண்டுள்ளது.

வாயலூர், இடையார்பாக்கம், செரப்பணஞ்சேரி, திரிசூலம், சோமங்கலம், மணிமங்கலம், பொன் விளைந்த களத்தூர் ஆகிய கோயில்கள் தூங்கானை மாடம் கட்டடக்கலையின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது.

கோயில்களின் வகைகள் :

திருமங்கையாழ்வாருக்கு முன்பு ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமான், கோச்செங்கணன் கட்டிய எழுபது கோயில்களை குறிப்பிட்டு மேலும் அவரது திருத்தாண்டகத்தில் எட்டு சுட்டிகாட்டுகிறார்.20 பெருங்கோயில்களைஇச்செய்திகளை தேவார இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.

“பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு டெட்டு மற்றும் கரக்கோயில், கடிபொழில்சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக்கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட்டடேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றோ”

தேவாரம் இப்பாடலில் பெருங்கோயில் தவிர மாடக்கோயில், காரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்று ஏழுவகைக் கோயில்கள் இருந்தனவென்று அறிகிறோம், இவ்வேழுவகைக் கோயில்களை விஜயம், ஸ்ரீபோகம் ஸ்ரீவிலாசம், கந்தகாந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிருஷ்டம், வேசரம் என்று வட இந்தியாவில் அறியப்படுகின்றன.”

விலை:400/-
Buy this book online: https://www.heritager.in/product/thoongaanai-maadak-koyilgal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in