கல்லெழுத்துக்கலை – நடன. காசிநாதன்
விலை: ₹250
பல்லவர் செப்பேடுகளின் பிரிவுகள்
தமிழக வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து பல்லவர் காலம் இடம் பெறுகிறது. இக்காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் / நூற்றாண்டு வரை எனலாம். பல்லவர்களை, அவர்கள் வெளியிட்டுள்ள செப்பேடுகளில் காணப்படுகின்ற மொழியைக் கருத்திற் கொண்டு மூன்று வகையாகப் பிரிப்பர் வரலாற்றாசிரியர்கள். (1) பிராகிருத மொழியைச் செப்பேடுகளில் கையாண்ட பல்லவர்கள் என்றும், (2) சமஸ்கிருத மொழியைக் கையாண்ட பல்லவர்கள் என்றும், (3) சமஸ்கிருதத்தையும், தமிழையும் கலந்து கையாண்ட பல்லவர்கள் என்றும் அவர்களைக் கூறுவர். பிராகிருத மொழியையும், சமஸ்கிருத மொழியையும் தங்களது செப்பேடுகளில் கையாண்ட பல்லவர்கள் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தோராவர். சமஸ்கிருதத்தையும், தமிழையும் செப்பேடுகளில் கையாண்ட பல்லவ மன்னர்கள் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முடிய ஆட்சி செய்தவராவர்.
செப்பேடும் மொழியும்
பிராகிருத மொழியில் வெளியிட்ட செப்பேடுகள் மூன்று கிடைத்துள்ளன. இவைகளில் மிகவும் பழமையானது ‘மயிதவோறு’ செப்பேடு மற்ற இரண்டு ‘ஹிரஹடகல்லி’, ‘குணபதேயம்’ ஆகிய செப்பேடுகள் ஆகும். இந்த மூன்று செப்பேடுகளுள்ளும் மயிதவோலு செப்பேடு மட்டும்தான் முழுவதுமாகப் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டு செப்பேடுகளிலும் பிற்பகுதியில் உள்ள மங்கல வாசகம் சமஸ்கிருத மொழியில் காணப்படுகிறது.
முழுவதும் சமஸ்கிருத மொழியில் எழுதப் பெற்ற செப்பேடுகள் மொத்தம் 17 உள்ளன. முற்பகுதியில் சமஸ்கிருதமும், பிற்பகுதியில் தமிழும் சுலந்து எழுதப் பெற்ற செப்பேடுகள் 9 கிடைத்திருக்கின்றன.
பிராகிருத மொழிச் செப்பேடுகள் பிராகிருத மொழியில் உள்ள மூன்று செப்பேடுகளுமே
சிவஸ்கந்தவர்மனைச் சேர்ந்தவை என்று ஒரு சாரார் கருதுகின்றனர். திரு, டி. என். சுப்பிரமணியம் அவர்கள் பிராகிருத மொழியில் உள்ள குணபதேயச்செப்பேடு பிற்காலத்தில் ஆண்ட வேறொரு ஸ்கந்தவர்மன் காலத்தில் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார். அவர் அவ்வாறு கருதுவதற்கு அச்செப்பேட்டின் பிற்பகுதியில் சமஸ்கிருத மொழி கையாளப்பட்டிருப்பதும், எழுத்தமைப்பில் வளர்ச்சியேற் பட்டிருப்பதும் காரணங்களாகும் என்று கூறுகிறார். இது சரியே எனப்படுகிறது.
இம்மூன்று செப்பேடுகளுமே பல்லவர்களுடைய காலத்தைக் கணிப்பதற்கு உதவுவனவாக அமையவில்லை, ஆனாலும் மயிதவோலு செப்பேடு வெளியிடும் போது சிவஸ்கந்தவர்மன் யுவமஹாராஜனாக இருந்தான் என்பதும், காஞ்சிபுரத்திலிருந்து அச்செப்பேட்டை வெளியிட்டான் எனபதும், பாரத்வாஜ கோத்ரத்தில் பிறந்தவன் என்பதும் பெறப்படுகிறது. அச்சாசனம் தான்ய கட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள கட்டளையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
ஹிரஹடஹல்லிச் செப்பேடு சிவஸ்கந்தவர்மனை ராஜாதி ராஜன் என்றும், பாரத்வாஜ கோத்ரத்தில் பிறந்தவன் என்றும், அக்னிஷ்டோம, வாஜபேய, அச்வமேத யாகங்களைச் செய்தவன் என்றும் தெரிவிக்கிறது. சிவஸ்கந்தவர்மன் காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு தன்னுடைய அதிகாரிகளுக்குக் கட்டளை இடுவதாக அமைந்திருக்கிறது. இது சிவஸ்கந்தவர்மன் அரசுப் பொறுப்பேற்ற பிறகு வெளியிடப் பெற்றதாகலாம்.
குணபதேயச் செப்பேடு விஜயஸ்கந்தவர்ம மஹாராஜாவின் காலத்தில் யுவமஹாராஜன் ஸ்ரீ விஜயபுத்தவர்மனின் மனைவியும், அங்குரன் என்று முடியும் பெயரைக் கொண்ட ஒருவனின் தாயுமான சாருதேவி நிலக் கொடை அளித்தாகத் தெரிகிறது. ‘அங்குரன்’ என்று முடியும் பெயர் ‘லலிதாங்குரன்’ என்பவனைக் குறிப்பதாக இருக்கலாம்.
இம்மூன்று செப்பேடுகளும் அவைகளை வெளியிட்ட மன்னர்களின் சிறப்பையோ அல்லது அவர்களின் முன்னோர்களின் சிறப்பையோ தெரிவிக்கவில்லை. ஆனால் அக்காலத்தில் நிலவிய ஒரு சில அரசியல் சமுதாயச் சூழ்நிலைகளைக் கூறுகின்றன. இவை மூன்றும் ஆந்திர கருநாடக மாநிலத்திலிருந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட தானமாகையால். பிராகிருத மொழியில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
புத்தகம்: கல்லெழுத்துக்கலை – நடன. காசிநாதன்
விலை: ₹250
Buy this Book: https://heritager.in/shop/kallezhuthu-kalai/
#Heritager
பிராகிருதச் செப்பேடுகளின் எழுத்து
இம்மூன்று செப்பேடுகளும், ஓரளவு வளர்ச்சியுற்ற பிராகிருதத் தமிழ் (பிராமி) எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் நாகார்ஜுன கொண்டாவில் காணப்படும் எழுத்துகளைப் பெரும்பாலும் ஒத்துள்ளன என்று கூறுவர்,
மஞ்சிக்கல்லுக் கல்வெட்டு
ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்திலுள்ள மஞ்சிக் கல்லு என்னுமிடத்திலிருந்து பிராகிருத மொழியிலுள்ள சிம்மவர்மனின் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இதுவும் ஓரளவு வளர்ச்சியுற்ற பிராகிருதத்தமிழ் எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டின் காலம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறெனில் கி.பி. 4-ஆம் நூற்றாண்டளவில் சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன் ஆட்சி செய்திருக்கிறான் என்பது உறுதியாகிறது. மற்ற செப்பேடுகளில் குறிக்கப் பெறும் அரச பரம்பரைகளைப் பார்க்கையில் இவ்வளவு முந்தைய காலத்தில் சிம்மவர்மன் என்பவன் இருந்ததாகக் காணமுடியவில்லை. எனவே, இச்சிம்மவர்மன், பல்லவர்களிலே வேறு கிளையைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்று திரு. டி.என். சுப்பிரமணியம் கருதினார். ஆனால் திரு. டி.சி. சர்க்கார் என்னும் கல்வெட்டறிஞர், இச்சிம்மவர்மன், மயிதவோலு, ஹிரஹடஹல்லி செப்பேடுகளை வெளியிட்ட சிவஸ்கந்தவர்மனின் தந்தையாக இருக்கலாம் என்று கூறுகிறார். அவ்வாறெனில் இவன் காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் முன்னதாக இருக்கும்.
சமஸ்கிருத மொழிச் செப்பேடுகள்
சமீபத்தில் கிடைத்துள்ள சிக்மகலூர் செப்பேடும் சமஸ்கிருத மொழியைக் கையாண்ட பல்லவர்கள் காலத்தில் வெளியிடப்பட்டவை யாகும். சமஸ்கிருத மொழிச் செப்பேடுகளில் காணப் பெறும் எழுத்து லசலும் சிலவற்றில் வளர்ச்சிடையந்த பிராகிருதத் தமிழ் எழுத்தாகவும், பலவற்றில்லவ கிரந்த எழுத்தாகவும் காணப்படுகின்றன.
வீரவர்மனின் மகனான விஜயஸ்கந்தவர்மனைச் சேர்ந்ததாக ஒரு செப்பேட்டையும் (ஒங்கோடு) விஜயஸ்சுந்தவர்மனின் மகனான சிம்மவர்மனைச் சேர்ந்ததாக மூன்று செப்பேடுகளையும் (வசந்தம், நெடுங்கராயம், உருவப்பள்ளி), யுவமஹராஜா விஷ்ணுகோபவர்மனின் மகனான சிம்மவர்மனைச் சார்ந்ததாக ஆறு செப்பேடுகளையும் (தர்சி, சிக்மகலூர், பீகிரம், மாங்களூர், விழவெட்டி, ஓங்கோடு), பிற்காலத்தைச் சார்ந்ததாக மூன்று செப்பேடுகளையும் (சுரா, சேந்தலூர், ஹொஸக்கோட்டை) கூறலாம்.
இச்செப்பேடுகளில் பெரும்பலானவற்றில் செப்பேட்டை வெளியிட்ட மன்னனது பெயரையும், அவனது தந்தை, பாட்டன், கொள்ளுப் பாட்டன் ஆகியோர்களுடைய பெயர்களையும் காண முடிகின்றன. ஆதலால் பல்லவர்களின் பரபேரையை ஓரளவுக்கே உணர முடிகிறது. மேலும் அரசியல், சமுதாயச் சூழ்நிலைகளைப் பற்றி விரிவாகப் புலப்படுத்துகின்றன. அக்காலத்தில் நிலவிய நாட்டுப் பிரிவு, அரசியல் அதிகாரிகள், பொருட்களுக்கும், மற்றவற்றுக்கும் விதிக்கப்பட்டிருந்த வரி வகைகள், மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
ஆரியமும், தமிழும் அமைந்த செப்பேடுகள்
சமஸ்கிருதத்தில் முற்பகுதியும், தமிழில் பிற்பகுதியும் கலந்து எழுதப் பெற்ற செப்பேடுகள் கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கிடைக்கின்றன. இவைகளில் மிகவும் பழமையானது சிம்மவர்மன் காலத்திய பள்ளங்கோயில் செப்பேடு. இதற்கடுத்து முதலாம் பரமேஸ்வர வர்மனின் கூரம் செப்பேட்டைக் கூற வேண்டும். அடுத்து நந்திவர்மப் பல்லவ மல்லனின் காலத்தில் வெளியிடப்பட்ட காசாக்குடி, புல்லூர், தண்டந்தோட்டம், கொற்றங்குடி செப்பேடுகள் ஆகியவைகளையும், மூன்றாம் நந்திவர்மனின் காலத்தில் வெளியிடப்பட்ட வேலூர்பாளையம் செப்பேட்டையும், நிருபதொங்கவர்மனின் பாகூர்ச் செப்பேட்டையும், அபராஜிதவர்மனின் வேலஞ்சேரிச் செப்பேட்டையும் கூறலாம். கீழ்க்காணும் முதலாம் பரமேஸ்வரவர்மனின் உன்னகுரவயம் செப்பேடும். இரண்டாம் நகரசிம்மனின் ரேயூருச் செப்பேடும், நந்திவர்மப் பல்லவ மல்லனின் உதயேந்திரம் செப்பேடும் சமஸ்கிருதத்தில் மட்டும் எழுதப் பெற்றிருந்த போதிலும், அவை மேற்கூறிய மற்ற சமஸ்கிருத-தமிழ்ச் செப்பேடுகளின் காலத்தைச் சார்ந்தவை என்ற காரணத்தினால் அவற்றையும் இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது. ஸ்கந்த சிஷ்யனின் ராயக்கோட்டைச் செப்பேடு
நடன காசிநாதன் சமஸ்கிருதம், தமிழ் ஆகிய பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்த ஸ்கந்தசிஷ்யன் யாரென்று இன்னும் முடிவாகவில்லை. திரு டி என். சுப்பிரமணியம் அவர்கள் இவன் சித்ரமாயன் காலத்திலிருந்த வேறொரு பல்லவனாக இருக்கலாம் என்று கூறிப் போந்தார்.
பல்லவர் செப்பேடும், இலக்கியமும் மேற்குறிப்பிட்ட சமஸ்கிருதம் – தமிழ் மொழிகளால் எழுதப்பெற்றுள்ள செப்பேடுகளால்தான் பல்லவர்களின் வரலாற்றைத் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. சிம்மவர்மன் காலம் முதல் தொடர்ச்சியாகப் பகுதிகள் பல்லவர்களின் பரம்பரையை நன்றாக அறுதியிட்டுக் கூறக்கூடியர் செய்திகளை இச்செப்பேடுகளின் சமஸ்கிருதப் தெரிவிக்கின்றன. மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையச் செப்பேடு பல்லவ வம்சத்தின் வரன்முறையைக் கூறுகையில் “அசோகவர்மன் போன்ற மன்னர்களுக்குப் பிறகு அந்த வம்சத்திலே காலபர்த்துரு பிறந்தான். அவன் மகன் சூதபல்லவன், அவனுக்குப் பிறந்தவன் வீரச்கூர்ச்சன். அவன் நாகராஜன் மகளுடைய கைத்தலத்தோடு அரசையும் பற்றினான்” என்று தெரிவிக்கிறது. இந்தச் செய்தியும் தமிழலக்கியங்களிலே காணப்படும் “சோழ அரசனான கிள்ளி நாகலோகம் சென்று, நாகக் கன்னிகை ஒருத்தியை மணந்து, சிறிது காலம் அங்கேயே வாழ்ந்தான். அவள் தனக்குப் பிறந்த பிள்ளைக்குத் தொண்டைக் கொடி ஒன்றை அடையாளாமாகக் கட்டி, அவனை, தந்தையான சோழ அரசனிடம் சேர்ப்பிப்பதற்குக் கப்பல் மூலம் அனுப்பி வைத்தாள். நடுக் கடலில் கப்பல் மூழ்கியதால் கரை சேர்ந்த அந்தக் குழந்தையைத் தொண்டைக் கொடியின் அடையாளம் கொண்டு சோழ மன்னன் எடுத்து வளர்த்துத் தன் இராச்சியத்தின் ஒரு பகுதிக்கு அரசனாக முடிசூட்டி வைத்தான்” என்ற செய்தியும் ஒத்து வருவதை எடுத்துக் காட்டாகக் கொண்டு பல்லவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்று ஒருசாரார் கூறுவர்.
புத்தகம்: கல்லெழுத்துக்கலை – நடன. காசிநாதன்
விலை: ₹250
Buy this Book: https://heritager.in/shop/kallezhuthu-kalai/
செப்பேடு கிடைத்த பகுதிகள்
பிராகிருத மொழியில் உள்ள செப்பேடுகள் மூன்றும், மஞ்சிக்கல்லுத் தூண் கல்வெட்டும் தமிழகத்துக்கு வடக்கேயுள்ள ஆந்திர, கர்நாடகப் பகுதியிலேயே கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்தச் செப்பேடுகள் அனைத்தும், அரசன் காஞ்சிபுரத்திலிருந்தே ஆணையிட்டான் என்று தெரிவிக்கின்றன. ஆகவே, இச்செப்பேடுகள் ஆந்திர, கருநாடகப் பகுதியில் கிடைப்பதற்குக் காரணம், அவை, கொடையைப் பெற்றுக்கொண்டோர்கள் வைத்திருந்த செப்பேட்டுப் பிரதிகளாக இருக்கலாம். இதிலிருந்து ஒன்று புரிகிறது. அதாவது தமிழ்நாட்டு சிவஸ்கந்தவர்மன் விசய ஸ்கந்தவர்மன் ஆகியோர்களின் ஆட்சிப் பகுதியில் ஆந்திரம், கருநாடகப் பகுதிகளில் சில பகுதிகள் அடங்கியிருந்தன என்பதாகும்.
சமஸ்கிருத மொழியில் கிடைத்துள்ள பெரும்பாலான செப்பேடுகளும் ஆந்திரப் பகுதியிலிருந்தே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகத் திரு. ஆராவமுதன் என்பவர் காஞ்சிபுரம் என்னும் ஊர், ஆந்திரப் பகுதியில் காணப்படும் ஊராகும் என்றும், அங்குதான் முற்காலப் பல்லவர்கள் தங்கியிருந்து ஆணைகளை வெளியிட்டார்கள் என்றும் கருத்துத் தெரிவித்தார். ஆனால் இக்கருத்து ஏற்புடையதாக யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. முற்காலப் பல்லவர்கள் ஆந்திர, கருநாடகப் பகுதிகளில் தென் பகுதியையும், தொண்டை மண்டலத்தையும் ஆண்டிருந்தவர்களாகக் கருதப்படல் வேண்டும். தமிழ் எழுத்தில் எழுதக் காரணம் முற்பகுதியில் சமஸ்கிருதத்திலும், பிற்பகுதியில் தமிழ் மொழியிலும் எழுதப் பெற்ற செப்பேடுகள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைத்துள்ளன. பல்லவர்களது ஆட்சி எல்லை தமிழகத்தின் தெற்குப் பக்கத்துக்கு விரிவடைய, விரிவடைய செப்புப் பட்டயங்களில் தமிழ் மொழியில் கொடை பற்றிய செய்தியை எழுத வேண்டுவது இன்றியமையாததாயிருக்கும் போன்று தெரிகிறது. முற்பகுதியில் சமஸ்கிருதத்தில் எழுதியது தாங்கள் சமஸ்கிருதத்தையும் அறிந்தவர்கள் என்று பெருமைபட்டுக் கொள்வதற்காகும்.
செப்பேடுகளில் சில வேறுபாடுகள்
தமிழ் நாட்டில் கிடைத்துள்ள பல்லவர் செப்பேடுகளுக்கும், ஆந்திர கருநாடகப் பகுதியில் கிடைத்துள்ள செப்பேடுகளுக்கும் சில வகையில் வேறுபாடுகள் காண முடிகின்றன. ஆந்திரப் பகுதியிலே கிடைக்கின்ற சாசனங்கள் கொடை அளித்த மன்னனையும் சேர்த்து நான்கு தலைமுறையினரைத்தான் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கிடைத்த செப்பேடுகளில் கொடையளித்த மன்னனையும், அவளது முன்னோர்களையும், புராண பரம்பரையையும் பற்றி கூறப்பட்டிருக்கும்.
செப்பேடுகளின் முத்திரைகளிலும் சில வேறுபாடுகளைக் காணக் கூடும். ஆந்திரப் பகுதியில் கிடைத்துள்ள செப்பேடுகளின் முத்திரைகளில் அஷ்ட மங்கலங்களின் (எண்மங்கல) உருவங்கள் காணப்படுவதில்லை. நந்தியைத் தவிர பிறைச் சந்திரன், சூரியன் அல்லது நட்சத்திரம், ஸ்ரீவத்ஸம், அளிப்பவனின் சிறப்பு, அவனது இருப்பிடம், ஆட்சியாண்டு, ஆகியவற்றைக் கூறி, கொடை பெறுபவனின் இருப்பிடம், அவனது குலம், கோத்திரம் ஆகியவை தெரிவித்து, கொடையளிக்கப்பட்ட பொருளை விவரிக்கும் தன்மையில் அமைந்திருக்கும். இப்பகுதியின் உதவியால் தான் மன்னனின் பரம்பரையையும், அவர்கள் புரிந்த போர்ச் செயல்கள், அவர்கள் செய்த அறக்கொடைகள் ஆகியவற்றையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஸமஸ்கிருதப் பகுதியின் சிறப்பு
இப்பகுதியில மன்னர்கள் பல தெய்வங்களோடு ஒப்பிட்டுப் பேசப்படுவர். அவ்வாறு பேசப்படும் போது மன்னர்களுடைய குணநலன்களையும், மன்னர்களின் தேவியர்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. தேவிமார்கள் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற செய்திகளையும் புரிந்து கொள்ளலாம்.
தமிழ்ப் பகுதியின் தன்மை
தமிழ்ப் பகுதியில் எந்த மன்னன் கொடை அளிக்கிறானோ அவனைக் குறிப்பிட்டு, அவனது இத்தனாவது ஆட்சி ஆண்டில், இந்தப் பகுதியில் அடங்கிய இந்த ஊர், இந்த பகுதியைச் சேர்ந்த இன்னாருக்குக் கொடை அளிக்கப்படுகிறது என்று குறிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு கொடையளிக்கப் பெற்றது நிலமாக இருப்பின் அரசனுக்குச் செலுத்தப்பட வேண்டிய எல்லாவித வரிகளிலிருந்தும் விலக்குப் பெற்றதாகக் குறிக்கப்பட்டிருக்கும். அத்தோடு அந்நிலத்துக்கு எந்த வாய்க்காலின் மூலம் நீர் பாய்ச்சப் பெறுதல் வேண்டும் என்பதும் தெரிவிக்கப் பெற்றிருக்கும். ஆந்திரப் பகுதியில் கிடைத்துள்ள பல்லவர் செப்பேடுகளில் தமிழ்ப் பகுதி காணப்படவில்லை; ஆதலால் கொடையளிக்கப் பெற்ற நிலத்தின் எல்லை அவைகளில் தரப்படவில்லை.
காலம் கூறும் முறை
ஆந்திரப் பகுதிகளில் கிடைத்துள்ள செப்பேடுகளில் ஆண்டு குறிப்பிட்டவுடன், அச்செப்பேடு எந்த பருவத்தில் வெளியிடப்பட்டது. என்பதைத் தெரிவிக்க வேனிற்காலம், மழைக்காலம், பனிக்காலம் ஆகியவற்றுள் ஒரு காலம் தரப்பட்டிருக்கிறது. இத்தகைய முறை தமிழ்ப் பகுதிகளில் கிடைத்துள்ள செப்பேடுகளில் காணமுடியவில்லை.
செப்பேடுகளில் அதிகக் கவனம்
அரசனது ஆணையைத் தாங்கி வெளிவருவதால் செப்பேடுகள் மிகவும் கவனத்துடன் வெளியிடப்பட்டன போன்று தோன்றுகிறது. ஆகிய ஊர்களிலிருந்து கிடைக்கப்பெற்ற மயிதவோலு, ஹிரஹடஹல்லி செப்பேடுகளின் தொடக்கத்தில் “த்ருஷ்டம்” என்று ஒரு சொல் காணப்படுகிறது. இச்சொல்லுக்குச் ‘சரி பார்க்கப்பட்டது’ என்று பொருள் கொள்கின்றனர். அவ்வாறாயின் மன்னன் வெளியிட்ட ஒவ்வொரு செப்பேடும் நன்கு ஒப்பிட்டுச் வெளியிடப்பட்டது என்பது தெளிவாகிறது. சரிபார்க்கப்பட்ட பின்னரே
செப்பேட்டில் மங்கலச் சொற்கள்
மயிதவோலு, ஹிரஹடஹல்லி, குணபதேயச் செப்பேடுகள் ‘சித்தம்’ என்ற மங்கலச் சொல்லைக் குறித்து விட்டு மற்ற செய்தியைத் தெரிவிக்கின்றன. சித்தம் என்றால் “காரியத்தில் வெற்றி கிட்டட்டும்’ என்று பொருள். இந்தச் சொல் காத்யாயனம் காலத்தில் வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது. இந்தச் செப்பேடுகளுக்குக் காலத்தால் பிந்தியதான சமஸ்கிருதச் செப்பேடுகளில் ‘ஜிதம் பகவதா’ என்ற சொல்லோடு ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற மங்கலச் சொல் காணப்படுகிறது. ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற சொல்லுக்கு “மங்களம் உண்டாகட்டும்” என்று பொருள் கூறப்பட்டு வருகிறது. இதைவிட மிகப் பொருத்தமான ”அருளிச் செயல்’” என்ற சொல் தமிழ்க் சுல்வெட்டுக்களில் காண முடிகிறது. வேலூர்பாளையம் செப்பேட்டின் தமிழ்ப் பகுதியில் மட்டும் ‘ஸ்வஸ்திஸ்ரீ நமஸ்ஸிவாய’ என்ற மங்கலச் சொல் காணப்படுகிறது. இச்செப்பேடுகளின் தமிழ்ப் பகுதி பெரும்பாலும் “கோவிசைய” என்றே ஆரம்பமாகின்றன. ராயக் கோட்டை, புல்லூர் செப்பேடுகளில் “ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய’ என்று ஆரம்பிக்கப்படுகிறது. காசாக்குடிச் செப்பேட்டின் தமிழ்ப் பகுதி ‘கோள் ஓலை’ என்று ஆரம்பமாகிறது. இம்முறை பிற்காலத்தில் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் ‘சோழகோன் ஓலை’ என்று காணப்படுகிறது.
குண்டூர் நகர்த் தோன்றல், பாண்டித் தமிழாபரண ஜென்னும் பலசிறப்பும் பெயரெய்திய பாண்டி மாராயப் பெருங்கொல்லனாகிய சிரீவல்லவன்”’ என்று கூறுகிறது. இவனுக்கு இறையிலியாக நிலம் அளிக்கப்பட்ட செய்தியும் தெரிய வருகிறது.
பிரஸஸ்தி, பிரஸஸ்தி சேஷம்
செப்பேடுகளில் சமஸ்கிருதப் பகுதியின் பிரஸஸ்திக்குத்தான் “பிரஸஸ்தி” என்றும், தமிழ்ப் பகுதியின் பிரஸஸ்திக்குப் “பிரஸஸ்திசேஷம்” என்றும் பெயர் வழங்கியிருக்கிறது தளவாய்புரச் செப்பேட்டில் பிரஸஸ்தியை இயற்றியவன் “ஸ்ரீவல்லப மங்கலத்தில் வசிப்பவனும், வாக்காளனுமான (வாக்கு + ஆளன்) மாதவிகவி” என்றும். என்றும் பிரஸஸ்திசேஷத்தை இயற்றியவன் “பாண்டிய த்ரமிடர்களுக்கு (தமிழர்க்கு) அலங்காரமானவனும், கருமார் கூட்டத்தில் முக்கியனும், சிவபாத தாமரையைத் தியானிப்பவனுமான கவி கூறப்பட்டுள்ளது. இவனையே தமிழ்ப்பகுதி பாண்டித் தமிழாபரணர் என்னும் பல சிறப்பும் பெயரெய்திய பாண்டிமாராய்ப் பெருங் கொல்லனாகிய சிரீவல்லன் ” என்று தெரியப்படுத்துகிறது.
பிரஸஸ்தி பாடியவர்கள்
சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டின் பிரஸஸ்தியை “கலைகள் அனைத்தும் கற்றவனும், அடக்கம், நீதி இவற்றின் பிறப்பிடமுமான விஷ்ணு என்பவரின் முன் தோன்றலும் மதுரகுணனின் நண்பனுமான வாசுதேவன். என்பவன் இயற்றியிருக்கிறான். சிவகாசிச் செப்பேட்டின் பிரஸஸ்தியை “நல்ல கவிதைக்கு இருப்பிடமானவனும், பிருகஸ்பதி போன்றவனுமான ரவி என்பவனின் பேரனும், சாத்திர ரீதியான புகழ் மிக்க விஷ்ணுத்ராதர் என்பவர் புத்திரனும், அந்தம் என்ற கிராமத்தில் பிறந்தவனும், இந்த அரசனுக்குத் தர்மோபதேசம் செய்யும் குருவுமான பார்த்திவகேஸரி என்ற கவி” இயற்றினான் என்று பெறப்படுகிறது.
செப்பேட்டை எழுதியவர்கள்
இச்செப்பேடுகளின் தமிழ்ப் பகுதியில் அவற்றை எழுதிய கொல்லர்களின் பெயரும் காணப்படுகிறது. வேள்விக்குடிச் செப்பேட்டை’ ‘யுத்தகேசரிப் பெரும் பணைகாரன்’ என்பவனும், சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டைப் ‘பாண்டிய பெரும்பணைகாரன் மகன் அரிகேசரி என்பவனும், தளவாய்புரச் செப்பேட்டை, “இச்சானத்திற்குச் செழுந்தமிழ்ப் பாடினோன் தந்தை நிருபசேகரப் பெருங்கொல்லன் நிறை புகழ் நக்கன்”
என்பானும் எழுதியுள்ளனர். ஸ்ரீவரமங்கலச் செப்பேட்டை எழுதியவனும், சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டை எழுதியவனும் பாண்டிப் பெரும்பணைக்காரனாகிய அரிகேசரியாகக், காணப்படுவதால் இரண்டு ஐயமறப் செப்பேடுகளும் பராந்த நெடுஞ்சடையனைச் சேர்ந்தவை என்பது புவனாகிறது. ‘பெரும்பணைகாரன்’ ‘என்பதற்குப் பெரிய கொல்லுப் பட்டறையை உடைய கொல்லன்’ என்று பொருள் கொள்ளலாம்.
சமஸ்கிருதப் பகுதியில் சில புதுமை
இச்செப்பேடுகளில் தளவாய்புரச் செப்பேடு, சின்னமனூர்ப் பெரிய செப்பேடு, சிவகாசிச் செப்பேடு ஆகியவற்றில் சமஸ்கிருதப் பகுதியிலும் யாருக்குக் கொடையளிக்கப்பட்டது. கொடையளிக்கப்பட்ட நிலம் எங்கு அமைந்துள்ளது, யார் யார் அதிகாரிகளாக இருந்தார்கள் என்ற செய்திகள் தரப்பட்டுள்ளன. இது பல்லவர் செப்பேடுகளின் சமஸ்கிருதப் பகுதியில் காணமுடியாதவை. ஏன், பாண்டியர் செப்பேடுகளான வேள்விக்குடிச் செப்பேடு, ஸ்ரீவரமங்கலச் செப்பேடு, சின்னமனூர்ச் சிறிய செப்பேடு ஆகியவற்றில் கூட காணமுடியவில்லை. ஆகவே சமஸ்கிருதப் பகுதியில் கொடை அளிக்கப்பட்ட நிலம் பற்றிய செய்தி சேர்க்கப்பட்டது கி.பி.9-ஆம் நூற்றாண்டிலிருந்து என்று கொள்ளலாம்.
இலக்கியச் செய்திக்குச் செப்பேட்டுச் சான்று தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் இச்செப்பேடுகளின் தமிழ்ப் பகுதியில் சங்ககாலப் பாண்டியர்கள் ஓரிருவர் குறிக்கப்படுகின்றனர். அத்தோடு அவர்களின் சிறப்பும் புகழப்பட்டுள்ளது. “கொல்யானை பலவோட்டிக் கூடா மன்னர் குழாந் பாண்ட்யாதிராஜன் ” என்று வேள்விக்குடிச் செப்பேடு பாண்டிய மன்னன் முதுகுடுமிப் பெருவழுதியைக் குறிக்கிறது. சின்னமனூர்ச் சிறிய செப்பேடு பாண்டிய மன்னருள் ஒருவன் “ஓராயிரம் க்ருது செய்தான்” என்று தெரிவிக்கிறது. இச்செய்தி பாண்டியன் முதுகுடுமி வேள்வி செய்ததைத் தெரிவிப்பதாகவே கருத வேண்டியுள்ளது. சங்க இலக்கியங்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சி முதுகுடுமி பெருவழுதியை “பல்சாலை முதுகுடுமி” என்று பகர்கிறது. ‘சாலை’ என்பது இங்கு ‘வேள்விச்சாலை’ ஆகும். எனவே, இலக்கியம் வாயிலாகக் கேள்விப்பட்ட செய்தி செப்பேட்டு வாயிலாகவும் உறுதிப்படுத்தப்படுகிறது. அத்தோடு செப்பேடும் உண்மையான நிகழ்ச்சியைத் தெளிவுறுத்துகிறது என்பது தீர்மானிக்கப்படுகிறது.
ஆலங்கானத்து அமர்
என்று பாண்டியர்களின் முன்னோர் சிறப்புக்களைக் கூறுமிடத்தில் “ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும்” தளவாய்புரச் செப்பேடும், “தலை ஆலங்கானத்திற்றன்னொக்கு மிஞ வேந்தரைக் கொலை வாளிற் றலைதுமித்துக் குறைத் தலையின் கூத்தொழித்தும் ” என்று சின்னமனூர் பெரிய செப்பேடும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றி பேசுகின்றன.
அருந்தமிழ் நற்சங்கம்
மதுரை மாநகர் ஏற்படுத்தப்பட்டதும் அங்கு சங்கம் அமைக்கப் பெற்றிருந்ததும், அச்சங்கத்தில் மாபாரதம் தமிழ்ப்படுத்தப்பட்டதும் ”தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனில் லருந்தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும்” என்று தளவாய்புரச் செப்பேடும்; “மஹா பாரதத் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று சின்ன மனூர்ப் பெரிய செப்பேடும் புலப்படுத்துகின்றன. மதுரையில் சங்கம் அமைக்கப் பட்டிருந்தது என்று கூறப்பட்டு வந்த இலக்கியச் செய்திகள் இவை மூலம் நிரூபிக்கப்படுகின்றன.
மதுரைக் காஞ்சியும், தளவாய்புரச் செப்பேடும்
தளவாய்புரச் செப்பேட்டின் தமிழ்ப் பகுதியைப் பாடிய “பாண்டித் தமிழாபரண னென்னும் பல சிறப்புப் பெயரெய்திய பாண்டிமாராயப் பெருங்கொல்லனாகிய சிரீவல்லவன்” பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியைச் சுவைத்துச் சுவைத்துப் படித்திருப்பான் போல். என்று தோன்றுகிறது. தமிழ்ப் பகுதியின் தொடக்கமே மதுரைக் காஞ்சியின் தொடக்க வரியாகிய “ஓங்குதிரை வியன் பரப்பில்” ஆரம்பமாகிறது. இப்பகுதியின் இறுதி வரிகளிலும், மதுரைக் காஞ்சியின் முத்திரையை உணர முடிகிறது.
பகல் செய்யும் வெண்ஞாயிறும், இரவுச் செய்யும் வெண் திங்களும்
கொடை அளிக்கின்றவன், தான் அளிக்கின்ற அக்கொடை ‘சந்திராதித்ய வரை’ சந்திரன் சூரியன் உள்ளவரை நிலை பெற்றிருக்கும் என்று கூறி அளிப்பதுதான் வழக்கமாகக் கல்வெட்டுக்களில் காண முடிகிறது. அதையே கூற வந்த இக்கவிஞன் அச் சொல்லுக்குப் பதிலாகத் தம் மனத்தில் அலை மோதிக் கொண்டிருந்த மதுரைக் காஞ்சியின் வரிகளாகிய ‘பகற் செய்யும் வெண்ஞாயிறும் இரவுச் செய்யும் வெண்திங்களும்’ என்ற பகுதியை அப்படியே “பகல்செய்யும் பருதி ஞாயிறும் இரவுச் செய்யும் பனிமதிஉம் ஞாலமும் உளவளவும்’ என்று தந்திருக்கிறான். எனவே அவன் தன்னைத் தமிழா பரணன் என்று கூறிக் கொள்ளவது பொருத்த முடையதுதான் என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறான்.
ஆரியம் விராய்த் தமிழ்
இத்தமிழ்ப் பகுதியில் ஆங்காங்கே வடமொழிச் சொற்கள் வருமிடங்களிலெல்லாம் கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதைத் தளவாய்புரச் செப்பேடு “ஆரியம் விராய்த் தமிழ்” என்று கூறிச் செல்கிறது. இவ்வாறு எழுதுவது மிகவும் சிறந்தது என்று கருதப்பட்டது போன்று காணப்படுகிறது. இம்முறை தான் பிற்காலத்தில் (விஜயநகர் காலத்தில்) ‘மணிப்பிரவாள நடை’ என்று வழங்கி வந்தது போலும்! பல்லவர் செப்பேடுகளில் தமிழ்ப் பகுதியில் பிரஸஸ்தி ஸேஷம் பகுதி இருந்திருந்தால் பாண்டியர் செப்பேடுகளில் காணப்படுவது போன்று பல்லவர் செப்பேடுகளிலும் ‘பிரஸஸ்தி ஸேஷம்’ பகுதி (தமிழ்ப் ப்ரஸஸ்தி) இருந்திருந்தால் பல்லவர்களைப் பற்றிய தெளிந்த வரலாறு கிடைத்திருக்கும். பல்லவர் செப்பேடுகளின் தமிழ்ப் பகுதி தேர்ச்சி பெற்றப் புலவர்களால் இயற்றப்படவில்லை. காரணம், புலவர்கள் எழுதுமளவுக்கு செய்திகள் தமிழ்ப் பகுதியில் சேர்க்கப்படவில்லை. தமிழ்ப் பகுதி சாதாரணமாகக் கொடை அளிக்கப்பட்ட நிலத்தையும், அதன் எல்லைகளையும், யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்ற விவரத்தையும், தெரிவிப்பதாகவே காணப்படுகிறது. அதே நேரத்தில் அவர்கள் செப்பேடுகளின் சமஸ்கிருதப் பகுதி சிறந்த கவிஞர்களால் இயற்றப்பட்டிருக்கிறது. ஆகவேதான் அப் பகுதியில் பல்லவர்களின் பரம்பரையை ஓரளவு தெரிந்து கொள்ள ஏதுவாகிறது. பல்லவர் செப்பேடுகளின் தமிழ்ப் பகுதியில், பாண்டியர் செப்பேடுகளின் தமிழ்ப் பகுதியில் காணப்படுவது போன்ற தமிழ்ப் பிரஸஸ்தி பகுதி சேர்க்கப்பட்டிருந்தால், பல்லவர்கள் யார், அவர்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் உள்ள உறவு என்ன, இலக்கியங்களில் கூறப்படும் கதைகளுக்கும், அவர்களுக்கும் உண்மையிலே தொடர்பு உண்டா என்ற கேள்விகளுக்குத் தெளிவான விளக்கம் கிடைத்திருக்கும்.
புத்தகம்: கல்லெழுத்துக்கலை – நடன. காசிநாதன்
விலை: ₹250
Buy this Book: https://heritager.in/shop/kallezhuthu-kalai/