4000 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பயன்படுத்திய முதல் வரைபடம், பிரான்சு நாட்டில் பிரிட்டானி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பெருங்கற்கால அரசால் உபையோகபடுத்தப்பட்ட முதல் வரைபடம். இவற்றில் அந்த அரசின் எல்லைகளும், பெருவழிப் பாதைகளும், முக்கிய இடங்களும், நீர் வழித் தடங்களும், என பல வரைப்படத் தகவல்கள் மிகத் துல்லியமாக (80% Accuracy) வரையப்பட்டுள்ளதுன.
ஒரு பெருங்கற்கால அரசின் வருவாய் தொடர்பாகவும், அந்த எல்லைகளை நிர்வகிக்க பதிவு செய்யப்பட்ட ஆவணமாகவும் இது இருந்திருக்க கூடும் என்பது அறிஞர்களின் கருத்து.
இது கண்டுபிக்கப்பட்ட போது ஒரு வெண்கலக் காலக் கல்லறையின் சுவராக இந்த வரைபடத்தை கொண்ட கல், மறுமுறை (reuse) பயனபடுத்தப்பட்டுள்ளது. எனவே, பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்களை வெறுத்த, அல்லது எதிர்த்த மற்றொரு சமூக இனம் இதனை உடைத்து, வேறு பயன்பாட்டுக்கு கல்லறை மூடியாக பயன்படுத்தி உள்ளது.