Description
இலக்கியப் படைப்பாக்கத்தின் வீரியமான காலமாக இருந்த எண்பதுகள் காலகட்டத்து கலை இலக்கிய பண்பாட்டு அம்சங்களையும் படைப்புத் தரம், விமர்சனப் பார்வை, இலக்கியச் செயல்பாடுகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் விளக்கிச்செல்லும் இந்நூல் வாசக எளிமையோடு அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பூமணி, டானியல், பாவண்ணன் ஆகிய படைப்பாளிகளின் படைப்புக்கள் பற்றிய மதிப்பீடுகளும், ‘பாரதீயம்’ நூல் பற்றிய மதிப்பீடும் தவிர பிற கட்டுரைகள் தமிழகப் பண்பாட்டுத் தளங்களைப் பற்றிய பொது அணுகுமுறைகளாக உள்ளன.




