Description
பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர அரசின்கீழ் தமிழ்நாட்டில் செயல்பட்ட நாயக்க குறுநில மன்னர்கள். இராணுவத்தை சார்ந்தில்லாமல், சமூகத்தினரின் தனி உரிமைகள் சம்பந்தமான சிவில் அரசை நடத்தினார்கள் என்று இந்நூல் வலுவான ஆதாரங்களோடு எண்பிக்கிறது. அப்போதைய வரலாற்றுப் புவியியலை முன்னிறுத்தி சோழமண்டலக் கடற்கரை மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட வேளாண் உற்பத்தி, விவசாய உறவுகள், மற்றும் கைவினைப் பொருள் பொருளாதாரத்தையும் விளக்குகிறது. கன்னடம் மற்றும் தெலுங்கு பேசிய மக்கள் தங்கள் வசிப்பிடங்களை மாற்றி புதிய குடியேற்றங்கள் தமிழகத்தில் வந்த தருணத்தில் கிராம மற்றும் நகர்ப்புற இணைப்புகளை எவ்வாறு உள்நாட்டு வணிகத்தோடு ஒன்றியிருந்தது எனவும், போர்ச்சுக்கீசியர்களின் வருகையினால் கடல் வாணிபத்தில் ஏற்பட்ட
மேம்பாடு மற்றும் தாக்கங்களையும் அடையாளப்படுத்துகிறது. தமிழ்ச் சமூகம் இதனால் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் போராட்டங்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.