Description
தமிழக வரலாறு முழுமையாக எழுத பெறவில்லை என்பது பெருங்குறையே . இதற்கு காரணம் வரலாற்று ஆவணங்களாக திகழும் திருகோயிற் கல்வெட்டுகள் செப்பேடுகள் போன்றவை இன்னும் பதிப்பில் வராமல் பல்லாயிரக்கணக்கில் உள்ளன இருப்பினும் ஆங்காங்கே வரலாறும் முழுமையாக எழுதபெற்று வருமாயினம் வரலாற்றை அறிய பெருந்துணையாய் அமையும் முனைவர் மீனாட்சி அம்மையார் ,தேவகுஞ்சரி போன்றவர்களின் முயற்சியால் ஆலவாய் நகர வரலாறும் நமக்கு கிடைத்தன அந்நூல்கள் போன்றே தஞ்சை நகர வரலாறு கூறும் இந்நூலும் தமிழக வரலாறு அறிய துணையாய் நிற்கும் என நம்புகிறேன்
இப்பணியில் என்னை ஆட்படுத்திய என் ஆசிரிய பெருந்தகை முனைவர் இரா நாகசாமி அவர்களுக்கு நான் கடிபட்டுள்ளேன்.1994 ஆம் ஆண்டு உலகதமிழ் நாட்டின் முதல் பதிப்பக வெளி வந்து அந்த வருடத்தின் சிறப்பு பரிசையும் வாங்கி சென்றது இப்புத்தகத்தின் பெருமையாகும் இதனை மேலும் செப்பம் செய்து புதிய செய்திகளை இணைத்து அகரம் பதிப்பகத்தால் வெளிவிடப்பட்டுள்ளது.


























