வெள்ளை மொழி (அரவாணியின் தன்வரலாறு) | ரேவதி

240

Add to Wishlist
Add to Wishlist

Description

பெண்ணாக வாழப்போராடும் அரவானி ஒருவரின் தன்வரலாறு இது. பெண்ணாகத் தம்மை உணர்ந்த கணம் முதல் இவரது போராட்டம் தொடங்குகிறது. தம்மை ஒத்தவர்களைக் கண்டறிந்து அவர்களோடு ஒத்து அவர்களின் மரபுகளைக் கடைபிடித்தல், அரவானியருக்கு என்று விதிக்கப் பட்ட பாலியல் தொழில் சார்ந்து வாழ்தல் என வெவ்வேறு வகை அனுபவங்களை வெளிப்படையாகப் பேசும் நூல் இது. – பெருமாள் முருகன் நாமக்கல்லில் பிறந்த துரைசாமி, தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து ரேவதி என்று மாற்றிக்கொள்ளும் தருணத்தில் இருந்து தொடங்கும் அவமானத்தின் கசப்பு இந்தப் புத்த கத்தின் அடுத்தடுத்த பக்கங்களில் ஆங்காங்கே படிந்துகிடக்கிறது. நாமக்கல், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு என வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழ வேண்டிய நிர்பந்தம் கொண்ட ரேவதி, எல்லா இடங்களி லும் மீண்டும் மீண்டும் சந்திப்பது அவமானம், வன்முறை, ஏமாற்றம். இதனூடாகச் சில காதல்களும் அன்பு ததும்பும் மிகச் சொற்ப மனிதர்களும். இஜரா (திருநங்கை), குரு, சேலா (சீடர்), பாவ்படுத்தி (குருவுக்குச் செய்யும் மரியாதை), தந்தா (பாலியல் தொழில்), அமாம் (திருநங்கைகள் நடத்தும் குளியலறை) எனத் திருநங்கைகளின் சமூகக் கட்டமைப்பு மற்றும் சம்பிரதாயங்களினூடாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் நமக்குப் புதியவை.

Additional information

Weight0.25 kg