சுவடியியல் – கோ உத்திராடம்

110

Add to Wishlist
Add to Wishlist

Description

சுவடி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ஓலைச்சுவடிதான். தமிழகத்தில் முன்பெல்லாம் முதியோர் கையில் ஓலையும், அரையில் எழுத்தாணியும் வைத்திருந்தனர். வீடுகள் தோறும் ஓலைச்சுவடிகள் இருக்கும்.
அக்காலத்தில் ஓலையில் தான் கணக்கு எழுதுவர். சுவடி என்பது எழுத்துக்கள் பதிமாறு (சுவடு) எழுதப் பெற்ற ஏடுகளில் தொகுப்பு சுவடி எனப் பெயர் பெறுகின்றது.

இந்திய தேசியக் கலை மற்றும் பாரம்பரியப் பொருட்கள் பாதுகாப்பு மையத்தின் மூலம் சுவடிகள் 1995 ஆம் ஆண்டு கணக்கெடுக்கும் பணி செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் 31.5 லட்சம் சுவடிகளுக்கு மேல் இருப்பது அறிய முடிகிறது. மேலும் சுமார் 1,50,000 சுவடிகள் ஆசியக் கண்டத்திலும் 60,000 சுவடிகள் ஐரோப்பிய நாடுகளும் பாதுகாக்கப்படுகின்றன.

சுவடிகளின் வகைகள்:-
சுவடிகள் எழுதப்பட்ட பொருட்களை அடிப்படையாக கொண்டு சுவடிகளை,
•    ஓலைச்சுவடி
•    தாள் சுவடி
•    காகிதச்சுவடி

எனவும்,

எழுது முறையைக் கொண்டு
•    ஓவியச்சுவடி
•    ஒளிரும் சுவடி
எனவும்,

மொழியின் அடிப்படையில்
•    தமிழ்ச்சுவடி
•    வடமொழிச்சுவடி
•    தெலுங்கு சுவடி
எனவும்,

சுவடிகள் கூறும் பொருளைக் கொண்டு
•    இலக்கியச்சுவடி
•    இலக்கணச்சுவடி
•    சோதிடச்சுவடி
•    வைத்தியச்சுவடி
•    கணக்குச்சுவடி
•    சித்திரச்சுவடி
•    ஆவணச்சுவடி
என வகைப்படுத்தி குறிப்பிடுகின்றன.

தமிழ்ச் சுவடியியல் என்பது தமிழ் சுவடிகளின் உள்ளடக்கத்தை, உருவாக்கத்தை, பராமரிப்பை, வரலாற்றை ஆயும்இயல் ஆகும். தமிழ்ச் சுவடிகளைக் கண்டுபிடித்தல், பட்டியலிடுதல், பேணுதல், வாசித்தல், விளக்குதல், மொழிபெயர்த்தல் உட்பட்ட செயற்பாடுகள் இத் துறையில் அடங்கும். இது தமிழ் தொல்லியல் துறையின் ஒரு துணைப் பிரிவாகும். தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் நிறுவனம் ஆகியன தமிழ்ச் சுவடியியல் தொடர்பான கல்வியினை வழங்குகின்றன.

Additional information

Weight0.25 kg