சோழமண்டலக் கடற்கரையில் ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம் 1681-1947 கடலூர் நகரமயமாதல் ஓர் ஆய்வு

390

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சோழமண்டலக் கடற்கரையில் – ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம் 1681-1947 – கடலூர் நகரமயமாதல் ஓர் ஆய்வு

ஆசிரியர் – பேராசிரியர். டாக்டர். கு. கன்னையா, பி.எச்.டி

நூலாசிரியரைப்பற்றிய குறிப்புகள்

பேராசிரியர் முனைவர் கு. கன்னையா அவர்கள் நெடுங்குடி குட்டிசாமி பிரஹதாம்பாள் தம்பதியருக்கு 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ஆம்நாள் புதுக்கோட்டையில் பிறந்தார். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் இளங்கலை (கணிதம்) பட்டப்படிப்பையும் (1968), புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இளங்கலை ஆசிரியர் பட்டப்படிப்பையும் (1971) முடித்தார். 1977-இல் சென்னை பல்கலைக்கழகத்தில் (தனிப்படிப்பு) எம்.ஏ..(வரலாறு) பட்டத்தையும், புதுவைப் பல்கலைக் கழகத்தில்எம்ஃபில்(1990), பி.எச்.டி.,(1996) பட்டங்களையும் பெற்றார்.

1968 முதல் 1982 வரை தமிழ் நாடு, புதுவை அரசுப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராகவும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியராகவு பணி புரிந்தார். 1983 முதல் புதுவை மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றி காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் இணைப் பேராசிரியாகப் பணிபுரிந்து 2008-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் புதுவைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி வழிகாட்டி (Research guide) என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் அவர்கள் நகரமயமாதல் வரலாற்றில் (Urban History) புலமை பெற்றவர். பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகளில் இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய மற்றும் பன்னாட்டுக் கருந்தரங்குகளில் வரலாறு தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்.

Weight 0.4 kg