வேங்கடம் முதல் குமரிவரை – தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

1,500

ஐந்து பாகங்களைக்கொண்டு அமைந்துள்ள இந்நூலில், முதல் பாகமான ‘பாலாற்றின் மருங்கிலே ‘ என்பதில் 27 கோயில்களையும், இரண்டாம் பாகம் ‘பொன்னியின் மடியிலே’ என்பதில் 30 கோயில்களையும். மூன்றாம் பாகம் ‘காவிரிக் கரையிலே ‘ என்பதில் 23 கோயில்களையும், நான்காம் பாகம் ‘பொருநைத் துறையிலே’ என்பதில் 31 கோயில்களையும், ஐந்தாம் பாகம் ‘வேங்கடத்துக்கு அப்பால்’ என்பதில் 17 கோயில்களையும் ஆராய்ந்து விரிவாகத் தரவுகள் தரப்பட்டுள்ளன. நூலாசிரியர் இதுவரை நாம் அறியாத பல செய்திகளைத் திரட்டித் தந்துள்ளார். எடுத்துக்காட்டிற்கு, ‘இறைவனால் ஆடப்பட்டதைத் தாண்டவம் என்றும். இவ்வாட்டம் தட் தட் என்று நிலத்தைத் தட்டி ஆடுவதால் தாண்டவம் என்றாயிற்று எனவும் விளக்கியுள்ளார். இதேபோன்று, கோயில்களால் விவசாயம் வளர்ந்து கைத்தொழில்கள் பெருகியிருந்ததாகவும், கல்தச்சர் – சிற்பிகள் – வல்லுநர்கள் -கலைஞர்கள் பணியாளர்கள் என பெரும் சமூகத்தையே கோயில்கள் கட்டிக்காத்ததாகவும் பதிவிட்டுள்ளார். இப்படிப்பட்ட பல அரிய தகவல்களையெல்லாம் தன்னகத்தே கொண்டு கோயில்கள் கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளார்.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மக்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு கோயிலுக்குச் சென்று பக்தியோடு இறைவனை வழிபட்டு வருகின்றனர். உண்ணாநோன்பிருந்து நேர்த்திக்கடனைச் செலுத்தி கோயிலை வலம் வந்து மந்திரம் ஒதுவதால் மன நிறைவு கொள்கிறவர்களும் உண்டு. இவர்களில் எவரும் கோயிலின் வரலாற்றையோ, அமைப்பு முறைகளையோ,கலை நுட்பங்களையோ அறிந்துகொள்வதில்லை. இந்த அறிதல் இன்மையின் விளைவாக கலைகளும் பண்பாடும் கேள்விக்குறியாகின்றன. இதனை தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் மனம் வெதும்பி கோயில்களைப் பற்றி ஆராய்ந்து அதன் அருமையை உணர்த்தியுள்ளார். நூலுக்குரிய தலைப்பைத் தொல்காப்பியத்திலிருந்து சூட்டியிருப்பது சிறப்புக்குரியதாய் உள்ளது.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்”

தொல்காப்பியம்: பாயிரம்

இப்பாயிரப் பாடல்வழி வேங்கடத்திற்கும் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பே தமிழ்கூறும் நல்லுலகம் என்கிறார் பனம்பாரனார். இதன் இரு எல்லைகளின் பெயரால் தலைப்பிட்டு இந்த நிலப்பரப்பிற்குள் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு அவற்றின் வரலாற்றுச் சிறப்பு, கலைநயம் ஆகியவற்றை ஆராய்ந்து அவர் எழுதியதே ‘வேங்கடம் முதல் குமரி வரை என்னும் இந்நூல் கல்கி பத்திரிகையில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Weight0.25 kg