தமிழக கோட்டைகளை முதல் பகுதி.தொல்லியல் மாமணி புலவர் சி எஸ். முருகேசன்.
சிறப்புமிக்க கோயில்களைப் போலவே தொன்மை வாய்ந்த கோட்டைகளும் நமது கலாச்சார பெருமையாக போற்றப்படுகிறது.
கோவில்களுக்கு ஒரு தொன்மையான வரலாறு இருப்பது போல கோட்டைகளுக்கும் அந்த தொடர் வரலாறு இருக்கிறது காலந்தோறும் கோவில்கள் வளர்ச்சி அடைந்தது போலவே கோட்டைகளும் அதன் அமைப்பில் பல மாறுதலைக் கண்டு வளர்ந்திருக்கின்றன.
சாதாரண வில் அம்பு, ஈட்டி, கொண்டு ஓடும் கோட்டையா இருந்து துப்பாக்கியால் சுடும் கோட்டையாக மாறி பீரங்கி தாக்குதல் நடத்தும் நவீன கோட்டையாகவும் மாறியிருக்கின்றது. அந்த வளர்ச்சி மட்டும் அப்படியே தொடர்ந்திருந்தால் கோட்டைகள் எல்லா முப்படைகளுக்கும் நிலைகளான விமான தளங்களாகவும், ஹெலிகாப்டர் மைதானங்கள் ஆகும். காலாட்படை பயிற்சி தளங்களாகவும், அகழிகள் வாயிலாக கப்பல் படை தளங்களாகவும் மாற்றப்பட்டு கோட்டை முழுவதுமே ராணுவ மையமாக உருவாகி இருக்கக்கூடும்.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியும் கோட்டைகளை அடிப்பதில் அவர்கள் காட்டிய அவசரமும் கோட்டைகளே இருக்க கூடாது. கட்டக்கூடாது என்று அச்சுறுத்திய அவர்களின் சட்ட திட்டங்களும் தமிழ்நாட்டில் கோட்டைகளை உருவாகாத வண்ணம் செய்துவிட்டன.
ஆங்கிலேயர் அச்சுறுத்தியதாலோ என்னவோ சுதந்திரக்கு பின்னும் கூட கோட்டைக்கட்டி ஆட்சி நடத்த ஆட்சியர் யாரும் முன்வரவில்லை.
கோட்டைக்கட்டி ஆள்வது எல்லாம் அந்த காலம் மன்னர் ஆட்சி முடிந்து விட்டது. மக்களாட்சியில் கோட்டைகள் எங்களுக்கு தேவையில்லை என்று தொல்லியல் துறை வசம் ஒப்படைத்து விட்டனர்.
மக்களாட்சிக்கு வந்தால் என்ன? தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சி இன்னமும் கோட்டையில் தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களாட்சியை நடந்தாலும் அமைச்சர்களெல்லாம் கோட்டையில்தான் ஆட்சி நடத்துகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்.
சுதந்திர இந்தியாவில் நமக்கு கிடைச்சதெல்லாம் ஓட்டை உடைசல் கோட்டைகளை, ஆனால் மாநிலம் தோறும் ராணுவ தலைமையகங்கள் மாவட்டம் தோறும் காவல் தலைமையகங்கள், ஆட்சியர் அலுவலகங்கள் என்று கோட்டை அமைப்புகள் தொடர வேண்டிய கோட்டைகளை தொடருவார் இன்றி கனவாகவே போய்விட்டது.
கனவு மெய்ப்பட வேண்டும், ஆனால் கோட்டை கட்டடக்கலை மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். இலக்கிய செய்திகளாய் வரலாற்றுத் துணுக்குகளை மறைந்து போன அந்த கோட்டை தொழில்நுட்ப மீண்டும் அறிமுகமாக வேண்டும் அந்த மறைந்து போன கோட்டை தொழில்நுட்பம் தான் கூட்டை கலையாக உருவாக வேண்டும்.
மறந்து போன, மறைந்து போன கொட்டைகளை பற்றி ஒரு சின்ன முன்னோட்டமாக இந்த நூல் வெளிவருகின்றது. முன்னேற்றத்தினை அலங்கரித்து பார்க்க இணையதள படங்கள் சில உதவி இருந்தன.
இந் நூலின் தொடர்ச்சியாக தமிழக வரலாற்றுக் கோட்டைகள், தமிழகக் கோட்டைகளும் காதல் கோட்டைகளும், தென்னிந்திய வட இந்தியக் கோட்டைகள் உள்ளன.
நூல்கள் தொகுப்பில் உள்ளவை:
- தமிழகக் கோட்டை கலை – சி.எஸ் முருகேசன்
- தமிழக வரலாற்று கோட்டைகள் – சி.எஸ் முருகேசன்
- தமிழகக் கோட்டைகளும் காதல் கோட்டைகளும் – சி.எஸ் முருகேசன்
- தென்னிந்திய வட இந்தியக் கோட்டைகள் – சி.எஸ் முருகேசன்
- இந்தியாவில் கடல் கோட்டைகள் – சி.எஸ் முருகேசன்
- தமிழக கோட்டைகள் – விட்டல் ராவ்
Related