Description
இந்நூல் ஆரம்பகாலத்திலிருந்து பிற்காலச்சோழர்காலம் வரையுள்ள காலகட்ட கலை, பண்பாடு, வணிகம், சமூகம் குறித்து விரிவாக விளக்குகிறது. ஐந்திணை சமுதாயம், ஆரம்பகால நாட்டார் சமயமும் வைதீகமாதலும், சமயப்பூசல்கள், பக்தியியக்கம், இலக்கண இலக்கிய நூல்கள், சைவத்தின் எழுச்சி, கட்டிடம் ஓவியம் மற்றும் பிற கலை, பண்பாடு, சோழர்களின் நிர்வாகம் பற்றியெல்லாம் அறியப்படாத பல புதிய தகவல்களும் செய்திகளும் ஆய்வு விவரங்கள் அடிப்படையில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.





























