Description
மூன்றாம்மாண்டு பி.ஏ. வகுப்பிற்கும் எம்.ஏ. வகுப்பிற்கும் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்பது புதிய பாடம். இதனைக் கற்பிக்கத் தனி நூல் இல்லை . இதன்கண் தமிழகக் கலைகள் ஒரு பகுதியாகும். அவை கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, வார்ப்புக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நாடகக்கலை, மருத்துவக்கலை, சமயக்கலை, தத்துவக்கலை, இலக்கியக்கலை முதலியன. இங்கு இவை பதினொன்றும் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் மேலே குறிக்கப்பெற்ற மாணவர்க்கும் தமிழார்வம் கொண்ட பொதுமக்கட்கும் பயன்படும் முறையில் எழுதப் பெற்றுள்ளது.




