ராவண நிழல் – இரா.சைலஜா சக்தி

540

கோயிலை சார்ந்திருக்கும் கிராமியக் கலைகளுக்கு அழிவில்லை, அதே நேரத்தில் தோல்பாவைக் கூத்து போன்ற எத்தனையோ நாட்டுப்புறக் கலைகள் அழிவை நோக்கி செல்கின்றன’ என்ற நூலாசிரியரின் கருத்து சிந்திக்கத்தக்கது. ஒவ்வொரு கதையின் இடையிலும் தோல்பாவைகூத்தின் முக்கியத்துவத்தை பெருமாள் சார் மூலம் மரம், கிளி பேசுகிறது. தோல்பாவைக் கூத்துக்கலைஞர்களின் வரலாறு, வாழ்வியல், அவலத்தையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. நாட்டுப்புறக்கலை ஆர்வலர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

PAGE NO :497

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழகத்தில் தோல்பாவைக் கூத்து ஒரு குடும்ப கலையாகவே இருந்து வருகிறது. இந்த நாட்டுப்புறக் கலையை மையப்படுத்தி எழுதப்பட்டது இந்த நாவல். பெரும்பாலும், கணிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கூத்துக்கலையை நடத்துகின்றனர். தென்மாவட்டத்தின் மருதகுளம், வாகையூர் கிராமங்களை கதைக் களமாக கொண்டு எழுதப்பட்ட இந்நூல், ஜமீன்தார் காலத்துக்குப் பின்னர் தோல்பாவை கூத்தின் வீழ்ச்சி, கூத்து நடத்துபவரின் பிரச்னைகள் குறித்து பேசுகின்றது. மருதகுளம் கிராமத்தில் இரு ஆண்டுகளாக மழையில்லாததால் பஞ்சாயத்து கூட்டி தோல்பாவை கூத்து நடத்த முடிவெடுக்கப்படுகிறது. உடனே தோல்பாவை கூத்துக்கலைஞர் சண்முகத்திடம் கூத்து கலை நடத்த ஊர் தலைவர் உத்தரவிடுகிறார். இதற்கிடையே வாகையூரில் இருந்து மருதகுளத்துக்கு திருட வந்த சங்கிலியை சண்முகம் காட்டி கொடுக்க இருவருக்கும் பகையானது. இதனால் சண்முகத்துக்கும், அவரின் சுற்றத்தாருக்கு ஏற்படும் பிரச்னைகள், அதை தாண்டி எப்படி கூத்தை நடத்தி முடிக்கிறான், இரு ஊரின் பகை தீர்ந்ததா என்பதை வலுவான கதாபாத்திரங்கள் மூலம் உள்ளூர் மொழியில் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். ‘கோயிலை சார்ந்திருக்கும் கிராமியக் கலைகளுக்கு அழிவில்லை, அதே நேரத்தில் தோல்பாவைக் கூத்து போன்ற எத்தனையோ நாட்டுப்புறக் கலைகள் அழிவை நோக்கி செல்கின்றன’ என்ற நூலாசிரியரின் கருத்து சிந்திக்கத்தக்கது. ஒவ்வொரு கதையின் இடையிலும் தோல்பாவைகூத்தின் முக்கியத்துவத்தை பெருமாள் சார் மூலம் மரம், கிளி பேசுகிறது. தோல்பாவைக் கூத்துக்கலைஞர்களின் வரலாறு, வாழ்வியல், அவலத்தையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. நாட்டுப்புறக்கலை ஆர்வலர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

Weight0.25 kg