உலக வரலாற்றில் இடம்பெற்ற மன்னர்கள், போர் வீரர்கள், சமூகச் சிந்தனையாளர்களில் தனித்தன்மையுள்ள எழுச்சியான வாழ்க்கை நிகழ்வுகளை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். பலவும் சுவையான வரலாற்றுப் பின்னணி கொண்டவை.
விந்தையான போர்க்கருவி கண்டுபிடித்த அறிஞர் ஆர்க்கிமிடிஸ் வெளிப்படுத்திய அறிவு வியக்க வைக்கிறது. கருப்பினத்தவர் விடுதலைக்காகப் போராடிய மார்ட்டின் லுாதர் கிங், நாடக உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த பெர்னார்ட் ஷா என பலரது வாழ்க்கை நிகழ்வுகள் சிந்திக்க வைக்கின்றன.
இளம் வயதிலேயே இந்தியாவுக்கு வந்து ஏழைகளுக்கு சமூகப்பணி ஆற்றிய அன்னை தெரசா பற்றிய கட்டுரை தனித்து மின்னுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளின் சுருக்கமான வரலாற்று நுால்.