குறியியல், அமைப்பியல், புலனறிவு மொழியியல், பிரபஞ்சக் கோட்பாடு, அளவையியல் என தொல்காப்பியத்தை ஆராய்ந்து, கிரேக்கப் படைப்புகளுடன் ஒப்பீடு செய்யும் நுால்.
இன்பியல், இனவரைவியல், அழகியல் கோட்பாடுகள் ஆராய்ந்து விளக்கப்பட்டுள்ளன. இலக்கிய வடிவங்கள் தோன்ற காரணங்களை திணை அமைப்புடன் வெளியிட்டுள்ளது. தொல்காப்பிய சிறப்பு, தனித்தன்மை சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. இடைக்கால உரையாசிரியர்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.