பழங்குடி மக்களின் இயற்கைப் பாதுகாப்பு முறைகள்

காணிக்காரன் :

தமிழகத்திலும், கேரளத்திலும் காணி என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் பொதிய மலைப் பகுதியில் காணிகள் வாழ்கின்றனர். மலை சார்ந்ததும் நீர் நிலைகளின் வளம் மிக்கதுமாகிய பகுதிகளில் காணிகள் வாழ்ந்து வருகின்றனர். இப்பழங்குடியினரின் வாழ் விடங்களானது 90 மீட்டர் முதல் 700 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன. காணிகளின் குடியிருப்புகள் பத்து முதல் 40 வரையிலான அளவில் காணப்படுகின்றன.சில இடங்களில் அவர்களுடைய வேளாண் தன்மைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித்தும் காடுகளில் உள்ளன. அவ்வாறு அமையும் பகுதிகளின் குடியிருப்புகள் ஒன்றிற்கொன்று அருகே இருக்குமாறு அவரவர் நிலங்களில் கட்டப்பட்டிருக்கும். மலைகளில் காணிகள் வாழ்ந்து வருவதனால் அம்மக்களை “மலை அரசர்”, “மலை அரையன்” என்று அழைக்கின்றனர்.

குடியிருப்புகள் :

காணிகளின் குடியிருப்புப் பகுதிகளின்/ அமைவிடமானது வரிசையமைப்பாகக் கட்டப்படும் மரயில் அமைகின்றன. அவ்வகை குடியிருப்புக்களை “முறைமைத் தோற்ற அமைவு” என்பர். முறையின்மை என்பது பிரிந்து பிரிந்து தனித்துக் காண்பதாகும். வரிசையாக அமைந்துள்ள காணிகளின் குடியிருப்புகளின் தோற்றமானது இனக் குழுவினரது பண்பாட்டுச் சூழற்சியில் இரண்டாம் நிலையில் அமைந்தவை எனக் கூறலாம். தனித்தனியாக வாழ்ந்த காலத்தில் மரத்தின் மீது பரணில் குடிசைகளை அமைத்து வாழ்ந்த முறையானது மாறிப் பின்னர் ஒரே குழுவினராக இருந்தமையால் நீர்வளம், பாதுகாப்பு என்னும் இரண்டு முக்கிய வசதிகளைப் பெற்ற இடங்களில் கூட்டாக வாழ்ந்த சூழலின் வெளிப்பாடுதான் வரிசையமைப்பு முறையாகும். அவ்வகையான குடியிருப்புகளைக் “கானிப்பத்” என்று பெயரிட்டழைக்கின்றனர். குடியிருப்புகளின் சுற்றுச் சூழலானது நீர் வளமும், மலைகளால் சூழப் பெற்றதுமாகவும், பாதுகாப்புக்குரியதாகவும் அமைந்துள்ளது. மற்றொரு வசதியானது போக்குவரத்திற்கும், சந்தைக்கும் உரியதாகும்.

 

 

குடிசைகள் :

காணிகளின் குடிசையமைப்பானது சுற்றுச்சூழலால் வடிவமைக்கப்பட்டதாகும். அவர்களது குடியிருப்புப் பகுதி களுக்கு அருகிலேயே கிடைக்கப்பெறும் மூங்கில், புல் ஆகிய இயற்கையாலான காட்டுப் பொருட்களே குடிசைகளுக்குரிய கட்டுமானப் பொருட்களாகின்றன. காட்டு மரங்களாலும், மூங்கிலாலும் இணைத்துக் கட்டப்பட்ட வரிச்சுகளும், தூண் களாகிய தாங்கு கால்களும் குடிசையமைக்கப் பயன்படுத்தப் படுகின்றன. வரிச்சுகளும், குறுக்குவிட்டக் கைகளுக்கும் மேல்புல்லால் வேயப்படுகின்றது. போதைப் புல் வகை பெரிதும் பயன் படுத்தப்படுகின்றது. நீண்டு வளர்ந்த இந்தப் புல்வகையானது உறுதியாகவும் நீண்ட நாட்களுக்கு நீடித்து இருக்கக்கூடியத் உறுதியாகளயும் பெற்றுள்ளன. சில இடங்களில் மூங்கில் தட்டிகளே தடுப்புச் சுவராகப் பயன்படுகின்றன.

குடிசையின் தரைமட்டம் சிறிது உயரமாகவும், மண்ணால் கட்டப்படுவதால் குடிசையில் உயரம் சிறிது உயர்ந்தும் காணப் படுகின்றது. மழைக்காலங்களின் நீரின் ஈரம் கசிவுற்று உள்ளே வராமலிருக்க இடம் உயரமாகக் கட்டப்படுகின்றது. தரையின் தள வடிவமைப்பானது செவ்வக வடிவம் கொண்டு காணப்படும் பொதுமைக்கூறு புலப்படுகின்றது. எனவே, காணிகளின் குடிசைகள் செவ்வகமாகக் கட்டப்படுகின்றன எனக் கூறலாம். குடிசைகளின் கீழ்ப் பகுதிகளில் 1 அல்லது 2 அடி உயர அளவில் மண் சுவர்களின் கட்டுமானங்கள் இடம்பெறுகின்றன. கூரையானது இருக்கச் சரிவு களுடன் தலையைத் தொடுமளவிற்கு தாழ்வாகக் கட்டப்படு கின்றன. கூரையின் கட்டுமானத்திற்கு புல்லும், மூங்கிலும் பயன் படுத்தப்படுகின்றன. மூங்கிலானது பக்கங்களைப் பிரித்துத் தடுக்கும் தட்டியாகவும் உட்பகுதியின் பிரிவுகளுக்குப் பயன்படுத்தப்படு கின்றது. தளங்களின் உட்பகுதியின் வடிவம் பொதுவாகச் செவ்வகமாக இருப்பினும் உட்பகுதியானது இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரித்துக் காணுமாறு பகுத்துக் கொள்ளப்படு கின்றது.

எனவே உட்பகுதியின் பயன்பாட்டு நிலையில் குடிசைகளின் உள்ளடக்கமைதி வெளிப்படுகின்றது. சமையலுக்குரிய அடுப்பு, படுக்கைக்குரிய பகுதி, பொருட்களை வைத்தற்குரிய இடம் எனப் பிரிக்கப்படுகின்றன. முக்கிய அறையெனப்படும் பகுதியில் அடுப்பு இடம்பெறுகின்றது. அடுப்புப் பகுதியானது குடிசையின் உள்ளேயே அமைவதால் குடிசையின் உட்புறமானது புகையால் சூழப்படு கின்றது. ஆயினும் காணிகளிடம் இதன் இடர்பாடுகளைக் கேட்கும் பொழுது, கூரையின் மீது புகையானது படிவுகளை உண்டுபண்ணு வதால் புகைப்படிவுகள் பசையாக ஒட்டிக் கொள்கின்றன. அப்பசை யானது கூரைப் புல்லினுடைய பயன்படும் காலத்தைக் கூட்டும். இதனால் 3 அல்லது 4 ஆண்டுகள் வரை கூடுதலாகக் கூரைபாதுகாக்கப்படும். இது அவர்களது நடைமுறை பாதுகாப்புத் தொடர்புடைய அறிவியல் சிந்தனையாகவும் உள்ளது. புகைப் படிவுகள் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது என்றும் கருது கின்றனர்.

காணிப்பழங்குடி மக்களின் இயற்கைப் பாதுகாப்பு முறைகள் குறித்து தனித்ததொரு ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல புதிய தகவல் பெற வாய்ப்புள்ளது. காணியின் குடிசைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு கதவுகள் உண்டு. கதவுகள் மரத்தாலோ, அல்லது மூங்கிலால் அமைக்கப்பெற்றோ முன்பகுதியில் வைக்கப்படுகின்றன. மூங்கிலால் ஆன கதவுகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். சன்னல்களை அமைக்கும் மரபினைக் காண முடியவில்லை.

தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு – டாக்டர் இராசு பவுன்துரை
விலை: 200/-
Buy this book online: https://www.heritager.in/product/thamizhaga-nattuppura-kattadakkalai-marabu/
WhatsApp to Order: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Telegram:
Website: www.heritager.in

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/