க. அயோத்திதாசர் ஆய்வுகள் – ராஜ் கௌதமன்

240

இந்திய – தமழகச் சூழலில் சாதி மத பேதமற்ற யாருக்கும் இது சாத்தியமே என்பதை அயோத்திதாசரின் வாழ்க்கைப் பணிகளிலிருந்து அறியலாம். இங்கே மதங்களை மட்டுமல்ல, சாதிகளையும் விட்டால்தான் ஒருவனால் பண்பும் ஒழுக்கமும் உள்ள மாந்தனாக வாழ முடியும் என்பதை புத்தபிரான் வழிநின்று நிறுவியுள்ளார் தாசர். பிராமணராயினும் சரி, பிராமணரல்லாதாராயினும் சரி, ஆதிதிராவிடராயினும் சரி, பிராமணியத்தைப் பரிபூரணமாகக் கைவிட்டாலன்றி அவர்களுக்கு விடுதலை இல்லை; மாந்த வளர்ச்சி இல்லை; மானிட நேயமும் இல்லை என்பது தாசரின் தீர்க்கதரிசனம்.

Add to Wishlist
Add to Wishlist

Description

க. அயோத்திதாசர் (1845 – 1914) என்ற பௌத்தப் பெரியாரின் ஆய்வுகளும் தீர்வுகளும் ஆசியாவுக்கு மட்டுமின்றி முழு உலகிற்கே ஒளியாக உதித்த கௌதம புத்தரின் அகிம்சையிலிருந்து உருப்பெற்றன. இதில் வன்முறையோ, ஆதிக்கமோ, புரோகிதமோ, சாதியோ, சமயமோ, கடவுளோ கிடையாது. மாறாகக் கருணையும் ஒழுக்கமும் சமத்துவமும் வினைத் தொடர்ச்சியும் உண்டு. ஒவ்வொருவனும் தன்னைப் பகுத்தறிவு மற்றும் அறம் சார்ந்த முறையில் உயர்த்திக் கொள்ளும் வழிமுறைகள் உள்ளன. சக மனிதனைச் சமமாக மதிக்கும் நேர்மை உண்டு. சாதி, மதம், நிறம், பால், இனம், நாடு, பொருள் ஆகிய அளவீடுகளின்றி சகமனிதரை அவர்களது செயல்களாலும் மொழியாலும் சிந்தனையாலும் பண்பாலும் ஒழுக்கத்தாலும் மதிப்பிடுகின்ற அணுகுமுறை உண்டு. இந்திய – தமழகச் சூழலில் சாதி மத பேதமற்ற யாருக்கும் இது சாத்தியமே என்பதை அயோத்திதாசரின் வாழ்க்கைப் பணிகளிலிருந்து அறியலாம். இங்கே மதங்களை மட்டுமல்ல, சாதிகளையும் விட்டால்தான் ஒருவனால் பண்பும் ஒழுக்கமும் உள்ள மாந்தனாக வாழ முடியும் என்பதை புத்தபிரான் வழிநின்று நிறுவியுள்ளார் தாசர். பிராமணராயினும் சரி, பிராமணரல்லாதாராயினும் சரி, ஆதிதிராவிடராயினும் சரி, பிராமணியத்தைப் பரிபூரணமாகக் கைவிட்டாலன்றி அவர்களுக்கு விடுதலை இல்லை; மாந்த வளர்ச்சி இல்லை; மானிட நேயமும் இல்லை என்பது தாசரின் தீர்க்கதரிசனம்.

Additional information

Weight0.25 kg