சித்திரமேழி பெரியநாட்டார் (Chitrameli Periyanattar) சபை என்பது தென்னிந்தியாவில் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்களின் வணிகக்குழுவாகும். சித்திரமேழி பெரியநாட்டார் தமிழ்நாடு முழுவதுமுள்ள வேளாண்குடிகளின் பிரதிநிதியாகச் செயல்பட்டார்கள். சித்திரமேழி பெரியநாட்டார் சபை பல்வேறு நிலையில் இருந்த வேளாளர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் செயல்பட்டது.
மேழி என்பது உழவுக் கலப்பையாகும். சித்திரமாகப் பெரிக்கப்பட்டிருக்கும் உழவுக்கலப்பை முத்திரையே சித்திரமேழி எனக் குறிப்பிடப்படுகிறது. சித்திரமேழி சின்னம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்களின் கூட்டமைப்பின் அதிகாரக் குறியீடாகக் கருதப்பட்டது.
சித்திரமேழி பெரியநாட்டார் சபை என்ற குழுவினர் அரியலூர் பகுதியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் வேளாண்மை பொருட்களை வாங்கி தமிழகம் முழுவதும் வணிகம் செய்துள்ளனர்