சங்க காலத்தில் பிரமதேயங்களின் முன்வடிவம்

சங்க காலத்தில் பிரமதேயங்களின் முன்வடிவம்

சங்க காலம் வீரயுகக் காலம். சீறூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோருக்கிடையே தொறுப் பூசல்கள் அடிக்கடி நடக்கும். சங்க காலத்தில் நிகழ்ந்த தொறுப் பூசல் வேறு, போர்கள் வேறு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் (பூங்குன்றன், ர. 2016: 19-30).

ஆநிரை கவர்தலும், ஆநிரை மீட்டலும் (தொறுப் பூசல்) மிக முக்கியமான ஆகோள் பூசல்களாகும். கூடவே எதிரி நாட்டிலிருந்து கொள்ளையடித்தலும் மிக முக்கியமான செயல்பாடுகளாகும். தொறுப் பூசல்களில் பெரும் வெற்றி காணும் வீரர்களுக்கு அக்காலத்தில் மன்னர்கள் நிலங்களையும் கிராமங்களையும் தானமாக வழங்கினார்கள்.

போரில் வெற்றி பெற்ற போர்த் தளபதிகளுக்கு மன்னர்கள் வழங்கிய நில தானங்கள் வீரர்களுடைய தேவைக்கும் அதிகமாகவே இருந்தது. கேரள வரலாற்றறிஞர் எம்.ஜி.எஸ். நாராயணன் ‘சங்க காலத்தில் போர் மறவர் வாழிடங்கள்’ (Warrior Settlements in the Sangam Age, 1982) न क இது பற்றி விவாதிக்கிறார்.

சீறூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள் முதலான குடித் தலைவனாட்சி (chieftain rule) முறை நடந்து கொண்டிருந்த ஆரம்பகால நிலமானிய முறையில் போரில் ஈட்டிய வெற்றிக்காக நிலங்களைத் தானமாகப் பெற்றார்கள்.

இதனையே பின்னாளில் வேந்தர்கள் தேசத்தின் ஆட்சி

சிறப்படைவதற்கு வேள்விகள் செய்தும் கோயில்களைப் பராமரிப்பு செய்தும் வந்த பிராமணர்களுக்குப் பிரமதேயங்களை வழங்கினார்கள். பிரமதேயங்களுக்கு ஒரு முன்வடிவம் போர் வீரர்கள் பெற்ற தானம் என்பதை நாம் இங்குக் கருத்தூன்றி கவனிக்க வேண்டும். ஆரம்ப கால நிலமானிய முறையிலும் சரி, வளர்ச்சி பெற்ற

நிலமானியத்திலும் சரி ‘மறுபங்கீடு’ (redistribution) என்பது மிக முக்கியமான பொருளாதாரச் செயல்பாடாக இருந்தது.

மன்னனிடம் வந்து சேர்ந்த/குவிந்த பொருட்களையும் நிலங்களையும் படைத் தளபதிகளுக்கும் வேள்வி, யாகம் செய்யும் பிராமணர்களுக்கும் மீளத் தருதல் மன்னனின் கடமையாக இருந்தது. நிலமானிய ஆட்சி முறையின் ஓர் அம்சமாக பிரமதேயங்கள் விளங்கின.

தமிழரின் தொன்மை சிந்துவெளி என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளியின் ஊர்ப் பெயர்களும் இடப்பெயர்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேசத்தின் வரலாறு தமிழரின் வரலாறாகத் தொடங்குகிறது என்பதை நவீன ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தப் புதிய வரலாற்றில் வசிப்பிடங்கள் பற்றி இந்த நூல் பேசுகிறது.

சிந்துவெளி தொடங்கி சங்ககாலம், இடைக்காலம். காலனியகாலம் ஊடாகச் சமகாலம் வரை தமிழரின் வாழிடங்கள் காட்டும் படிமலர்ச்சியைப் புதிய வெளிச்சங்களுடன் இக்குறுநூல் பேசுகிறது. இதனைப் பண்பாட்டு மானிடவியலாகக் காட்டுவது இந்த நூலின் முக்கியத்துவமாகும்.

இந்த நூல் காட்சிப்படுத்துகின்ற சிந்துவெளிச் சான்றுகள், சங்க இலக்கிய ஆதாரங்கள், வரலாற்று உண்மைகள். காலனியப் பதிவுகள், சமகாலப் போக்குகள் யாவும் தமிழரின் தனித்துவமான வரலாறாகும்.

இதில் ‘தமிழரும் சிந்துவெளியும்’ புதிய பேசு பொருளாகியுள்ளன. இந்தப் பெருமித காட்சிகளை இந்த நூல் நம் வசப்படுத்துகிறது.

-த.விவானந்தராசா

சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை

தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் – பக்தவத்சல பாரதி

Buy: https://www.heritager.in/product/tamilaga-varalatril-oorum-serium/

விலை: ₹90