சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். பல்லவர் காலத்தில் சமணம் வளர்க்கப்பட்டது. சைவமும் நிலைபெற்றுள்ளது. பல்லவர்கள் அளித்த பட்டயங்களை ஆய்வு செய்தே பல்லவ மன்னர்கள் யார்? எவர்? என இனங்கண்டுள்ளனர் ஆய்வாளர்கள். பிராகிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் முற்காலப் பல்லவர்கள். சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் இடைக்காலப் பல்லவர்கள். கிரந்தத் தமிழில் பட்டயங்களை வெளியிட்டவர்கள் பிற்காலப் பல்லவர்கள் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். அப்படியானால் பல்லவர்களின் தொடக்கம் எது? எத்தனை பல்லவ அரசர்கள் தமிழகத்தை ஆண்டுள்ளனர்? அத்தனை கேள்விகளுக்கும் தன் ஆய்வின் மூலம் இந்த நூலில் விடைகாண முயன்றிருக்கிறார் நூலாசிரியர் இரா.மன்னர் மன்னன். தொடக்கத்தில் சமண மதத்தினைப் பின்பற்றிய மகேந்திரவர்ம பல்லவனை சைவ மதத்திற்கு மாற்றினார் அப்பர் என்கிற திருநாவுக்கரசர். இதன் காரணமாக சமணப் பள்ளிகள் இடிக்கப்பட்டு சைவத் திருக்கோயில்களைக் கட்டினான் மகேந்திரவர்மன். இவன் காலத்தில்தான் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்களில் தமிழ் கிரந்தக எழுத்துப் பொறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மகேந்திரவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி என்பவர்தான் பெரியபுராணம் கூறும் சிறுத்தொண்ட நாயனார் என்கிறது இந்த நூல். பரஞ்சோதிக்குப் பிறகு கழற்சிங்கன் என்ற பல்லவ அரசனே சிவத்தொண்டராக மாறியுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு அரிய வரலாற்றுத் தகவல்கள் இந்த நூலில் காணப்படுவதே இதன் சிறப்பு எனலாம். கல்லில் கலைவண்ணம் கண்டவர்களின் வரலாற்றை பறைசாற்றும் முரசாக இந்த நூல் திகழ்கிறது. வாருங்கள்… பல்லவப் பேரரசை தரிசிப்போம்!
பல்லவர் வரலாறு: பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? – இரா.மன்னர் மன்னன்
₹250
Extra Features
- Book will be shipped in 3 - 7 days.
- Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 0.25 kg |
---|
Related products
சங்க இலக்கியத்தைத் தழுவிய தற்கால கவிதை நாடகங்கள் – முனைவர் ந. விஜயசுந்தரி
பத்மஶ்ரீ கவிஞர் சிற்பியின் ஒரு கிராமத்து நதி நாட்டுப்புறவியல் நோக்கு – முனைவர் பெ. சுப்பிரமணியன்
இராஜராஜ சோழன்: இன்றைய பொய்களும் நேற்றைய வரலாறும்-இரா. மன்னர் மன்னன்
தொல்காப்பிய உரையாசிரியர்கள் வழி அறியலாகும் தமிழ்ச்சமூகம் – முனைவர் ம. அகதா