பழங்காலத் தொழில்பிரிவுகள்
‘அந்தணர், அரசர், அளவர், இடையர், உப்பு வாணிகர் (உமணர்). உழவர், எயிற்றியர், கடம்பர், கடைச்சியர், கம்மியர், களமர், கிணைஞர். கிணைமகள். குயவர் குறத்தியர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர். கோசர், தச்சர்,துடியர், தேர்ப்பாகர், நுளையர், பரதவர். பறையர். பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொருநர், மடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர் யவனர். யாழ்ப்புலவர், யானைப்பாகர், யானைவேட்டுவர், வடவடுகர் வண்ணாத்தி வணிகர், வலைஞர், வேடர்’ என்று அக்காலத் தொழில்பிரிவினரை உவே.சாமிநாதையர் காட்டுவார் (புறநானூறு. உவேசா ப.65). இவற்றுள், சமூக முன்னேற்றத்திற்கான, பொருளாதாரம் சார்ந்த தொழில்கள் இங்குச் சிறப்பிடம் பெறுகின்றன.
அடிப்படைத் தேவைகளின் தன்னிறைவை எட்டிய ஒரு சமூகம் தம் சமூகத்தின் வளர்ச்சியை, மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, அதற்கான பொருளாதாரம் உட்பட பலவழிகளிலும் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள முனைதல் இயல்பு. சமூக மேம்பாடு என்பது. தொழில்துறை வளர்ச்சி, பல்துறை அறிவு, தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. தொழில்துறை வளர்ச்சி என்பது உள்நாட்டு இயற்கை வளங்களைக் கொண்டும். வேற்று நாட்டு மூலப்பொருள்களைக் கொண்டும் சிறக்கிறது. இயற்கை வளங்களை நிரம்பப் பெற்ற ஒரு நாடு, அவ்வியற்கை வளங்களை முதன்மை ஆதாரமாகக் கொண்டு தொழில்துறையில் தீவிரம் காட்டுதலும், தொழில்நுட்பங்களைப் புகுத்துதலும், அந்நாட்டின் பொருளாதார வளத்தினை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் தொழில்நுட்ப வளத்தைக் கொண்டு வேற்றுநாட்டு முதலீட்டைப் பெற முயலுதல் அந்நாட்டின் வளர்ச்சி விகிதத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாய் அமைகிறது. இவ்வடிப்படையில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும். வல்லமைத் தன்மைக்கும் தொழில்துறை வளர்ச்சி என்பது இன்றியமையாததாக வளியுறுத்தப்படுகிறது.
கிராமப்புற மற்றும் வேளாண்மை தொழில்களையே பெரும்பாலும் நம்பியுள்ள இந்தியா போன்ற நாடுகளில் ஏழ்மையை அகற்றி மக்கள்அனைவருக்கும் போதுமான முறையில் உணவு பெற்று, தேசம் வலுப்பெற, பயிர்த் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு, மீன்வளம், வனம் சார்ந்த வேளாண்மை, வேளாண்மை சார்ந்த வர்த்தகம் ஆகிய துறைகளில் விரைந்த வளர்ச்சி அடைய வேண்டும் (திட்டம். மே. 2004, ப.23) என்கிறது இன்றைய தொழில்துறைத் தொலைநோக்கு இவ்வகைத் துறைகளில் பழந்தமிழகம் கருத்தைச் செலுத்தியதையும், வளர்ச்சி பெற்றிருந்ததையும் இலக்கியங்கள் காட்டுகின்றன.
மேலும், பொருளாதார வளர்ச்சியின் தொடக்க உத்வேகம் வேளாண துறையின் மூலமும், அதன் தொடர்வளர்ச்சி தொழில்துறையைப் பொறுத்தும் அமைவதாகக் கணிக்கப்படுகிறது (திட்டம், மார்ச், 2006, ப.23), ஆகவே இவ்விரு துறைகளுக்கும் பழந்தமிழகம் கொடுத்த முக்கியத்துவம் இங்கு முதலில் நோக்கப்படுகிறது.
பழந்தமிழகத்தில் பல தொழில்கள் காணப்படினும், வேளாண்மை, வாணிகம், நெசவு, கால்நடைவளர்ப்பு, மீன்பிடித்தல், உப்பெடுத்தல், கட்டடத்தொழில், வளையல் தொழில் மண்பாண்டத் தொழில் தச்சுத் தொழில் வேட்டையாடுதல், உலோகத்தொழில், கைவினைப்பொருள்கள் தயாரிப்பு, தோல்பொருள் தயாரித்தல், முத்தெடுத்தல் போன்றவை முதன்மை பெறுகின்றன. இத்தொழில்களை அடிப்படைத் தேவைகளைச் சார்ந்த தொழில்கள், பொருளாதாரத்தைச் சார்ந்த தொழில்கள் என இருவகைகளில் பகுத்துக் காண்பது இயைபு. வேளாண்மை, நெசவு மற்றும் கட்டடத் தொழிலும் இவற்றை அடிப்படையாகக் கொண்டவையும் அடிப்படைத் தேவைகளைச் சார்ந்த தொழில்களாகவும், அவையல்லாத வணிகம் கால்நடை வளர்ப்பு. உலோகத்தொழில், கைவினைப்பொருள்கள் உற்பத்தி. காடு சார் தொழில்கள், கடல்சார் தொழில்கள் போன்றவை பொருளாதாரத்தைச் சார்ந்த தொழில்களாகவும் அமைகின்றன ‘தொழில்நுட்பம்’ என்பதன்கீழ் சில தொழில்கள் சுட்டப்படுகின்றன. அவை தவிர்த்த, பொருளாதாரம் சார்ந்த தொழில்கள் இங்கு நோக்கப்படுகின்றன. (நூலிலிருந்து)
பழந்தமிழர் தொழில்நுட்பம் – ஆ.மணவழகன்
விலை: 120/-
வெளியீடு: அய்யனார் பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/tamilr-tholilnutpam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers