இனவரைவியல் : வரலாறும் வரையறையும்
மானிடவியல் (Anthropology) என்பது மனித இனத்தின் உடல், மொழி, பண்பாடு, தொல்லியல் குறித்த பதிவுகளை ஆராய்வதாகும். சுருங்கக் கூறின் மனிதனைப் பற்றி ஆராயும் ஒரு முழுமையான அறிவியல் மானிடவியல் எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியிலேயே ‘மானிடவியல்’ என்னும் இந்த அறிவியலாராய்ச்சி (Epistemology) உலக தாடுகளில் தொடங்கப்பட்டுவிட்டது.
இது பண்பாட்டு மானிடவியல் (Cultural Anthropology), சமூக மானிடவியல் (Social Anthropology) என இரு பெரும் பிரிவுகளாக வரையறை செய்துள்ளனர் அமெரிக்க மானிடவியலாளர்கள். பண்பாட்டு மானிடவியலின் குறிப்பிடத்தக்க கூறுகளில் ஒன்றாக இனவரைவியல் அமைகிறது. இனவரைவியல் என்னும் சொல் Ethnography எனும் ஆங்கிலப் பதத்திற்கு நிகராகத் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கிரேக்க நாடுகளில் வாழும் மக்களின் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இனவரைவியல் தோற்றம் பெற்றது. கிரேக்க அறிஞரான ஹெரோடாட்டஸ் கிரேக்க இனவரைவியலின் தந்தை எனக் கருதப்படுகிறார். உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்த இவர் கிரேக்க வரலாற்றியலின் தந்தை எனவும் அறியப்படுகின்றார்.
தமிழில் வழக்கிலுள்ள இனவரைவியல் என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவாக்கம் பெற்றதாகும். Ethnography என்னும் ஆங்கிலச் சொல் ‘ethnos’, ‘graphein’ ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைக் கொண்டுள்ளதாகவும், ‘Ethnos’ என்பதற்கு ‘இனம்’, ‘இலைகுழு’, ‘மக்கள்’ என்றும். ‘Graphein’ என்பதற்கு ‘எழுதுதல்’ அல்லது ‘வரைதல்’ எனவும் பொருள் கொள்கிறார் மானிடவியல் ஆய்வாளர் பக்தவத்சல பாரதி.
இனவரைவியல் வரையறைகள் :
அறிஞர்கள் முன்வைக்கும் இனவரைவியல் வரையறைகளாகப் பின்வருவனவற்றை வரிசைப்படுத்தலாம். அவை :
1. ஒருமித்த வாழ்வியல் ஆதாரங்களைக் கொண்டு வாழும் ஒரு குழு அல்லது சமூகம் குறித்த பண்பாட்டின் முழுமையான தேடலை இனவரைவியல் என வரையறுக்கின்றனர் அமெரிக்க மானிடவியலாளர்கள்.
2. ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது சமூகத்தின் இனப்பரப்பு, தோற்றத்தொன்மம், புலப்பெயர்வு, இன அடையாளக் கூறுகள், உளவியல் கூறுகள், சமூகப் பிரிவுகள், வாழ்க்கைமுறை, தொழில் முதலானவற்றை விரிவாக எடுத்துரைப்பது இனவரைவியல் ஆய்வு ஆகும்.
3. இனவரைவியல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் பண்பாடு, வாழ்க்கைமுறை,நம்பிக்கைகள், அறிவாற்றல், பழக்கவழக்கங்கள் முதலானவற்றை முழுமையாகத் தொகுத்து வழங்குதலாகும். அவ்வாறு தொகுத்து வழங்கப்படும் இனவரைவியல் தரவுகள் வருணனைத் தன்மையுடையனவாகவே அமையும்.
4. இனவரைவியல் என்பது, கள ஆய்வுகளின் அடிப்படையில், மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்புநிலை விளக்கமாக அமையும் ஒருவகை எழுத்தாக்கம் ஆகும். தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப்பற்றி இனவரைவியலாகும். எழுதுவது
5. ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது கலாச்சாரம் தொடர்பாகக் களப்பணியில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு ஆராய்வதும் இனவரைவியல் ஆகும்.காலனிய ஆட்சியில் இந்த அடிப்படையில்தான் நூல்கள் வெளிவந்தன.
6. இனவரைவியலை வெளிப்படையானதாகவும் ஒருசேர்வானதாகவும் (Open and Dense) ஆக்க வேண்டுமென்பதே பிரெஞ்சு மானிடவியல் அறிஞர் லூயி துய்மோன் என்பவரின் முயற்சியாக இருந்தது.
7. மேலை பசிபிக் தீவுகளில் வாழும் துரோபிரியண்டர்கள் (Trobrianders) பற்றி ஆய்வு செய்த போலந்து நாட்டு மானிடவியலாளரான மாலினோவ்ஸ்கி (Malinowski) அம்மக்களின் இனவரைவியலை அறிந்துகொள்ள அவர்களின் குடும்ப இயல்பு, உடற்கூற்றியல் அறியாமை, உறவுமுறை அர்த்தம், முக்கியப் பொருளீட்டல் சடங்குமுறைகள் முதலியவற்றை அடிப்படைக் கூறுகளாகக் கொண்டார்.
8. இனவரைவியல் என்பது ஒரு சமூகத்தைப் பற்றி எழுத்துவழிப் படம் பிடித்துக் காட்டுவது. ஒரு சமூகத்தைப் பற்றிய மெய்மையை உருவாக்குவது. மக்களின் மனங்களில் உறைந்திருக்கின்ற பண்பாடுகளை வெளிக்கொண்டுவந்து எதார்த்தப்படுத்துவதே இனவரைவியல் என்பதாகும்.
இனவரைவியல் கூறுகள் :
இனவரைவியலைப் பழைய இனவரைவியல், நவீன இனவரைவியல் என இரண்டு கூறுகளாக இனவரைவியலாளர்கள் வரையறுத்துள்ளனர். இருப்பினும் இதன் முக்கியமான வகைகளாகப் பின்வருவனவற்றைப் பக்தவத்சல பாரதி கூறுகின்றார்.
1. காட்சி சார்ந்தது.(Photo/Film)
2. கலைக்களஞ்சியம் (Encyclopedic)
3. இயங்கியல் சார்ந்தது (Processual)
4. முழுமை சார்ந்தது (Holistic)
5. அன்றாட வாழ்வியல் மற்றும், காலமுறை சார்ந்தது. (Daily activities and other cycles)
6. தனிவகை சார்ந்தது (Particularistic)
7.வரலாறு சார்ந்தது (Historical)
8. தன்வரைவியல் சார்ந்தது (Biographies)
9. விதிகளின் அமைப்பை ஆராய்வது சார்ந்தது.(நூலிலிருந்து)
தமிழக அருந்ததியர்: வரலாறும் வாழ்வும் – முனைவர் ச.சீனிவாசன்
விலை: 200/-
வெளியீடு: பாலாஜி இன்டர்நேஷனல் பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/tamizhaga-arundhathiyar-varalaarum-vaazhvum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers