“இரும்புச் சத்து அதிகம் உள்ள உலகின் தலைசிறந்த காலை உணவைப் பற்றிய முதல் தமிழ் புத்தகம்!”
“பர்கர்”, பீட்சா என நவீன ரக உணவுகள் பிரபலமாகி உள்ள இந்த நிலையில் பழைய சோறின் மகிமை குறித்து கோமல் அன்பரசன் மிகத் துணிச்சலுடன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். ஏனோதானோ என்று இல்லாமல் இன்றைய இளைஞர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க அளவில் ஆதாரப்பூர்வ அறிவியல் விளக்கங்களையும் கொடுத்துள்ளார். பழைய சோற்றின் மருத்துவ குணங்கள், அதைத் தயார் செய்யும் விதம் போன்றவற்றை விளக்குவதோடு, பழைய சோற்றின் அருமை பெருமைகளை வெளிநாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ள அருமைகளும் இதில் உள்ளன. பழைய சோறா என்று இளக்காரமாக பார்க்கும் சிலருக்கு இன்று சில நட்சத்திர ஓட்டல்களில் கூட பழைய சோறு பரிமாறப்படும் தகவல் புதுமையானதுதான்.