மனிதரே மனிதரைச் சுமக்கும் ‘பல்லக்கு’ பற்றிய கட்டுரை முக்கியமானது. பல்லக்கில் மனிதர்கள் பவனி வரும் வழக்கம் தற்போது அருகிவிட்டது என்றாலும் முற்றிலும் வழக்கொழிந்து விடவில்லை என்பதைக் குறிப்பிடும் இளங்கோமணி அவ்வழக்கத்தை ஒரு சமூக அநீதியாகவே பார்க்கிறார். மன்னர்கள், அரசகுலப் பெண்டிர் மடாதிபதிகள், உயர் சாதியினர், நிலவுடைமையாளர்கள் போன்றோர் பல்லக்கில் பவனி வந்ததையும் பல்லக்குத் தூக்கிகளின் அவலநிலைகளையும் நூலாசிரியர் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார்.
வெறும் சாதாரண நிலையாகப் பல்லக்கையோ பட்டினப்பிரவேசத்தையோ எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தைப் பிரகடனப்படுத்தும் சாதனமாகப் பல்லக்கு இருந்திருக்கிறது. கார், பேருந்து போன்ற கனரக வாகனங்களின் போக்குவரத்து வந்தமையால் பல்லக்கு மெல்ல மங்கிப் போனது.
உள்ளடக்கம்:
பொருளடக்கம்
1. ஆரத்தி (ஆலாத்தி) யெடுப்பின் பேருண்மை.
2. பல்லக்கும் சமூக அநீதியும்..
3. பொற்கொல்லர்களின் குறியீட்டுச் சொற்கள்.
4. காது வடித்தலும் அதன் வீழ்ச்சியும்
5. மல்லிகைப்பூ வியாக்கியானங்கள்.
6. திருநெல்வேலியின் தோற்றமும் அதன் பரிமாணமும்
7. சுலோசன முதலியார் பாலத்தின் கதை வடிவக் கூறுகள்
8. தெய்வங்களும் பெண்களும்
9. தேர்- கோவில்-கலை.
10. ஆகாயத் தாமரை இந்தியச் சூழலியல்