சாதி: தோற்றம், செயல்பாடு, மாற்றத்தின் பன்முகங்கள் – சவிரா ஜெய்ஸ்வால்

350

Add to Wishlist
Add to Wishlist

Description

சுவிரா ஜெய்ஸ்வால் அவர்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்று ஆய்வுகள் மையத்தில் தொல்வரலாற்றுப் பிரிவின் மேனாள் பேராசிரியர். வரலாற்றுப் பாடத்தில் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துக் கொண்டு பின்னர் பாட்னா பல்கலைக் கழகத்தில் ஆர். எஸ். சர்மா அவர்களின் வழிகாட்டலில் முனைவர்ப் பட்டம் பெற்றார். 1962-இல் பாட்னா பல்கலை கழகத்தில் ஆசிரியப் பணியைத் தொடங்கியவர். 1971-இல் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்று ஆய்வுகள் மையத்தில் சேர்ந்தார். 1999-இல் ஓய்வு பெற்றார். 2002-இல் கூடிய ஆந்திரப் பிரதேச வரலாற்றுப் பேராயம், 2007இல் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயம் ஆகியவற்றின் பொது அரங்குகளுக்குத் தலைவர் இவர் ஆராய்ச்சியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவரின் அசலான இந்தியாவின் மதம், சமூகம் ஆகியனவற்றைப் பற்றிய ஆய்வுத் திறத்துக்கும் படைப்பாற்றலுக்கும் சான்றாக விளங்கும் வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலுக்கு அடுத்த மற்றொரு பெருநூல் உங்களின் கைகளில் தவழும் இதுதான்!

Additional information

Weight0.25 kg