பரிணாமத் தச்சன என்ற இந்நூல் டார்வினிசக் கோட்பாடு தான் அண்டப் பெருவெளியின், அனைத்துயிரின் தோற்றத்தைச் சரியாக விளக்குகிறது என்பது பேராசிரியர் க. மணியின் துணிபு. யாரும் இவ்வுலகையும் உயிர்களையும் சிந்தித்துப் படைக்கவில்லை. இது சுயம்பு. தன்னில் தானே உயிர்த்த பரிணாமத்தின் விளைவு என்பதைத் தர்க்க ரீதியாக இந்நூலில் நிறுவுகிறார் பேராசிரியர்.
ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய ‘The Blind Watch Maker’ என்ற நூல் தூண்டிய சிந்தனைகளைத் தம் நடையில், மொழியில், தமக்கே உரிய எடுத்துக்காட்டுகளின் நயங்களோடு பேராசிரியர் தந்திருக்கிறார்.
Language: Tamil
Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு